சிங்கப்பூரிலிருந்து கோவை வந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு!

கோவை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வந்த 41 வயது மதிக்கத்தக்க ஆண் பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவின் வகையை கண்டறிய மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


கோவை: சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால் வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதையடுத்து கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வருபவர்கள் மற்றும் ரேண்டமாக 2 சதவீதம் பயணிகளிடம் சளி மாதிரிகள் சேகரித்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் அனைத்து பயணிகளும் ஆட்டோமெட்டிக் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கோவை வந்த பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த கோவை கணபதியை சேர்ந்த 41 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை வீட்டில் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தொடர்ந்து அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்ன வகை கொரோனா என்பது குறித்து கண்டறிய அவரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...