கோவையில் கொரோனா தொற்றுக்கு பெண் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் தினமும் 10 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக தற்போது 92 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த உப்பிலிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சுகாதாரத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அரசு மருத்துவமனைகள், திரையரங்குகள், வணிக வளாகம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தினமும் 10 முதல் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது. கொரோனா காரணமாக தற்போது வரை 92 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை உப்பிலிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான பெண் கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி நுரையீரல் உள்ளிட்ட பிரச்னைகளுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அப்போது அவருக்கு அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில் அந்த பெண்ணை கொரோனா வார்டுக்கு மாற்றி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றினால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...