புற்றுநோய் குணப்படுத்த முடியாத நோய் அல்ல..! - மருத்துவர்கள் கருத்து

உலக அளவில் சுகாதாரத்துறைக்கு பெரும் சவால்களை தருவது புற்றுநோய். விலைமதிப்பற்ற மனித உயிர்களை பறிக்கும் இந்த புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்து, பொதுமக்கள் விழிப்புடன் இருந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் உயிரை காக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு, ஆண், பெண் இருபாலருக்கும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு கூட தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. முறையான விழிப்புணர்வு இல்லாததால் உயிரிழப்பு வரை செல்கிறது. ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து, உயிரை தற்காத்துக் கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்தியாவில் அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு!

உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கபடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் 13 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இரண்டே ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடுதலாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய மருத்துவ புள்ளி விவரங்களின் அடிப்படையில் 14 லட்சத்து 62 ஆயிரம் பேர் மருத்துவ சிகிச்சையில் இருக்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பெண்கள் மற்றும் ஆண்கள் என இருபாலரும் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த பெரு நகரங்கள் இந்த பட்டியலில் இணைந்துள்ளன.

புற்றுநோயை பொறுத்த வரையில் பெரும்பாலும் உணவு பழக்க வழக்கம், உடல் பருமன், நவீன வாழ்க்கை முறை உள்ளிட்டவை முக்கிய காரணமாக இருக்கின்றன.

பெண்களை விட ஆண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு!

ஆண்களைப் பொறுத்தவரையில் அதிகம் பேர் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக வாய் தொண்டை புற்றுநோயும், இரைப்பை, உணவு குழாய், வயிற்று புற்றுநோயும் கணிசமாக ஆண்களை பாதிக்கின்றன.

இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது புகையிலை பழக்கம், மது அருந்துவது, ரசாயனம் கலந்த துரித உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சியின்மை, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை மருத்துவர்கள் அடுக்குகின்றனர்.

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு!

பெண்களை பொறுத்தவரையில் நகர்ப்புற பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகளவிலும், கிராமப்புற பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய் உள்ளிட்டவை பெண்களை கணிசமாக அடுத்தடுத்த இடங்களில் பாதிக்கின்றன.

சிறுவயதில் பூப்படைதல், பெண்களுக்கு கர்ப்பம் கலைத்தல், 30 வயதிற்கு மேல் சென்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளுதல், தள்ளிப் போகும் மாதவிடாய், மாதவிடாய் நின்று போகுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் புற்றுநோய் ஏற்படுகிறது.

புற்றுநோயை பொறுத்தவரை பெரும்பாலும் நாள்பட்ட மூன்றாம் மற்றும் நான்காம் படிநிலைகளில் தான் பெரும்பாலானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால் ஆரம்ப கட்டத்தில் இதனை கண்டறிந்தால் எளிய சிகிச்சை முறைகளிலேயே அவர்களை குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொதுமக்களுக்கு அரசும், தொண்டு அமைப்பும் விழிப்புணர்வு!

புற்றுநோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதால் காப்பாற்றுவது சுகாதாரத்துறைக்கு கடினமாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் மற்றும் தன்னார்வலர்கள், தொண்டு அமைப்புகளும் பொதுமக்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வை பொதுவழியில் ஏற்படுத்தி வருகின்றனர்.

எனவே தொடர் காய்ச்சல், குரல் மாற்றம், உடல் வலி, திடீர் உடல் குறைவு, தொடர் இருமல், ரத்தப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் வரும் பட்சத்தில் உடனடியாக மருத்துவர்கள் அணுக வேண்டும்.

உடல் பரிசோதனை செய்வது கட்டாயம்!

அதுமட்டுமின்றி 30 வயது கடந்த பெண்கள், ஆண்கள், முதியவர்கள் என அனைவரும் அவ்வப்போது முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் புற்றுநோய் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

புற்றுநோய் ஒன்றும் குணப்படுத்த முடியாத நோய் அல்ல. ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதாக கதிர்வீச்சி தெரஃபி இன்றி சிகிச்சை தரலாம். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் உயிரை காக்கலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...