கண்நோய்களை குணமாக்கும் மருத்துவம்

எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிய மருத்துவ முறைகளை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். கண்களில் ஏற்படும் எரிச்சல், சிவப்பு தன்மை, கண்கள் வறண்டு போகுதல் போன்ற பிரச்னைகளை தீர்க்கும் மருத்துவம் குறித்து காணலாம். சோற்றுக்கற்றாழை, செம்பருத்தி, நந்தியாவட்டை பூக்கள் ஆகியவை கண்நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்நோய்களுக்கு சோற்றுக்கற்றாழை அற்புதமான மருந்தாகிறது. நோய் நீக்கியாக பயன்படுகிறது. மேல்பூச்சு மருந்தாகிறது. 

செம்பருத்தி இதயத்துக்கு பலம், இதம் தரக்கூடியது. தலைமுடிக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. கண் சிவந்த நிலை, எரிச்சலை போக்குகிறது. நந்தியாவட்டை மலர்கள் கண்களில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கிறது. செம்பருத்தியை பயன்படுத்தி கண்களில் ஏற்படும் எரிச்சல், வலிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: செம்பருத்தி, பால், பனங்கற்கண்டு. ஒரு பாத்திரத்தில் சிறிது பால் எடுக்கவும். இதில் செம்பருத்தி பூவின் இதழ்களை போடவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும்.  à®‡à®¤à¯ˆ குடிக்கும்போது கண்களில் ஏற்படும் எரிச்சல், வலி, வறட்சி சரியாகும். கண்களில் தொற்றுவால் ஏற்படும் சிவந்தநிலை மாறும். கண்களுக்கு பலம் கொடுக்கும். கண்களுக்கு குளிர்ச்சி தரும். கண்கள் தெளிவு பெறும்.

சோற்றுக்கற்றாழையை பயன்படுத்தி கண்நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சோற்றுக்கற்றாழை, சீரகப்பொடி, பனங்கற்கண்டு. சோற்றுக்கற்றாழையின் தோலை சீவிவிட்டு உள்ளே இருக்கும் சதை பகுதியை எடுத்து நன்றாக நீர்விட்டு அலசி எடுத்து அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் பனங்கற்கண்டு எடுக்கவும். அரைத்து வைத்திருக்கும் சோற்று கற்றாழை பசையை சேர்த்து பாகு பதத்தில் காய்ச்சி சீரகப்பொடி சேர்த்து கிளறவும். இதை காலை, மாலை வேளையில் தலா ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர கண் எரிச்சல், கண் வறட்சி சரியாகும். 

கண்கள் சிவந்த தன்மை, வீக்கம் சரியாகும். கண்களை மூடிக்கொன்டு கண்களில் மேல் வைத்திருந்தால் வெயிலினால் ஏற்படும் எரிச்சல் சரியாகும். கண்களின் கருவளையம் விலகிபோகும். சோற்றுகற்றாழை நோய் நீக்கியாகவும், புண்களை ஆற்றக் கூடியதாகவும் விளங்குகிறது. தீ காயத்துக்கு மருந்தாகிறது. நந்தியாவட்டை பூக்களை பயன்படுத்தி கண்வலி, வறட்சிக்கான மருந்து தயாரிக்கலாம். நந்தியாவட்டை பூக்களின் இதழ்களை சுத்தமான நீரில் சுமார் 3 மணி நேரம் ஊறவைத்து கண்களை கழுவதன் மூலம் கண் வலி, வறட்சி சரியாகும். கண் சிவப்பு மாறும். எரிச்சல் காணாமல் போகும். 

ஒரு பாத்திரத்தில் நந்தியாவட்டை பூ இதழ்களை நல்லெண்ணெயில் ஊறவைக்க வேண்டும். மெல்லிய துணியைகட்டி வெயிலில் வைத்து 2 நாட்கள் கழித்து வடிகட்டி எண்ணெய்யை  à®•ண்களை சுற்றி மசாஜ் செய்தால் கண் எரிச்சல், வலி, வறண்ட தன்மை போகும். கண் எரிச்சல், கண்களில் அழுக்கு படிதல், வலி போன்ற பிரச்னைகளுக்கு நந்தியாவட்டை மருந்தாகிறது. சொரி, சிரங்கு, படையால் ஏற்படும் அரிப்புக்கான மருத்துவத்தை பார்க்கலாம். நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் கருஞ்சீரகத்தை வாங்கி பொடித்து நல்லெண்ணெயில் இட்டு தைலப்பதத்தில் காய்ச்சி பாதிக்கப்பட்ட இடங்களில் பூசுவதால் சொரி, சிரங்கால் ஏற்படும் அரிப்பு பிரச்னை சரியாகும். தோல்நோய்கள் குணமாகும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...