போதைப் பழக்கத்திலிருந்து மீள அத்திப்பழம் சாப்பிடுங்கள்!

‘காணாமல் பூப் பூக்கும் கண்டு காய் காய்க்கும்’ அது என்ன? இந்த விடுகதைக்கு விடை à®¤à¯†à®°à®¿à®µà®¤à®±à¯à®•ு முதலில் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள்.




அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள்:

அத்திப்பழத்தில் புரோட்டீன், கார்போ ஹைட்ரேட், கால்ஷியம், ஃபைபர், பாஸ்பரஸ், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, பி 12 உள்ளது.இதில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Antioxidents உள்ளன.பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.




அத்திப் பழத்தின் நன்மைகள்:

  • அத்தி மரம் இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகிய அனைத்துமே பலன்களைத் தரும்.

  • அத்திப் பழத்தை தொடர்ந்து உட்கொண்டால் மூட்டுவலி, எலும்புத் தேய்மானம், மூலம் போன்ற பிரச்னைகள் தீரும்.

  • உணவை எளிதாக செரிக்கச் செய்யும். பித்தம் தணிக்கும்.

  • தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீங்கும். ரத்த உற்பத்தி அதிகரிக்கும். 

  • அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Anti Oxidants உள்ளன. 
  • அத்திப் பழம் அதிக போஷாக்கு அளிக்கக் கூடியது அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும்.

  • உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, உடலுக்குச் சுறுசுறுப்புத் தரும்

  • மலச்சிக்கலைத் தவிர்க்கும்.

  • அத்திப்பழச் சாறு வயிற்றுப் பிரச்னைகளுக்கு நல்லது. 

  • போதைப் பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களை வினிகரில் ஏழு நாட்கள் ஊற வைத்து அதன் பின் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிட வேண்டும்.


விடுகதைக்கான விடை 'அத்தி’ என  à®‡à®ªà¯à®ªà¯‹à®¤à¯ தெரிந்துவிட்டது தானே! அத்திப் பூ நம் கண்களுக்கு புலப்படுவதில்லை. காரணம் அது அடிமரத்திலிருந்து உச்சி வரை மரத்தை ஒட்டியே இருக்கும். அதனால் தான் ‘காணாமல் பூப் பூக்கும் கண்டு காய் காய்க்கும்’ என்ற விடுகதை போட்டு மகிழ்ந்தனர் நம் முன்னோர்கள்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...