மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் சாப்பிடக் கூடாத உணவுகள்!

தற்போது மூட்டு வலி பிரச்சனையால் ஏராளமான மக்கள் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். அப்படி மூட்டு வலி இருந்தால், குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது வலியை மேலும் மோசமாக்கிவிடும்.

அந்த என்ன உணவுகள் என்று உங்களுக்குத் தெரியாதா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும். இங்கு மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தக்காளி தக்காளி விதைகளில் யூரிக் அமிலம் அதிகளவில் உள்ளது. யூரிக் அமிலம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால், மூட்டுக்களில் யூரிக் அமிலங்கள் தேங்கி, அதனால் ஆர்த்ரிடிஸ் வலி மேலும் மோசமாகும். எனவே மூட்டு வலி இருப்பவர்கள் உணவில் தக்காளியை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

உப்பு

உப்பு மூட்டுக்களில் உள்ள அழற்சியை அதிகரித்து, வலியை கடுமையாக்கும். ஆகவே மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள், உப்புக்களை அதிகம் சேர்க்கக்கூடாது.

பால்

பால் மற்றும் பால் பொருட்களில் புரோட்டீன் மற்றும் அதன் குறிப்பிட்ட வகைகளும் உள்ளது. இவை ஆர்த்ரிடிஸ் வலியை அதிகரிக்கும். ஆகவே ஆர்த்ரிடிஸ் இருந்தால், பால் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

இறால்

இறாலில் யூரில் அமிலம் உள்ளது. இது ஆர்த்ரிடிஸ் நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இது எலும்புகளில் யூரிக் அமிலத் தேக்கத்தை அதிகரித்து, வலியையும், அழற்சியையும் அதிகரிக்கும்.

சர்க்கரை

அளவுக்கு அதிகமான சர்க்கரை மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் அறவேத் தொடக்கூடாது. ஏனெனில் அவை உடல் எடையை அதிகரித்து, மூட்டுக்களில் அழுத்தத்தை அதிகரித்து, வலியை மேலும் மோசமாக்கும்.

காபி

காபியில் உள்ள காப்ஃபைன் ஆர்த்ரிடிஸ் நோயாளிகளுக்கு கெட்டது. இது உடலை வறட்சியடையச் செய்து, வலியை மேன்மேலும் மோசமாக்கும்.

ஆல்கஹால்

ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு, ஆல்கஹால் விஷம் போன்றது. இது எலும்புகளை உடையச் செய்து, மூட்டுக்களைச் சுற்றி தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும்.

கத்திரிக்காய்

கத்திரிக்காயில் உள்ள அல்கலாய்டு, மூட்டு வலிகளையும், அழற்சியையும் மோசமாக்கும். எனவே ஆர்த்ரிடிஸ் நோயாளிகள் கத்திரிக்காயை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...