கோவையில் நிமோனியா தடுப்பூசியால் பாதிப்புகள் குறைந்துள்ளன- ஐஏபி மருத்துவக் குழு தகவல்


நவம்பர் 12ம் தேதியன்று உலக நிமோனியா தினத்தை முன்னிட்டு இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்- கோவை பிரிவு, 5 வயதிற்கு கீழ்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புகள் மற்றும் நடத்தைகள் பாதிப்பிற்கு நிமோனியா தொடர்ந்து முதன்மை காரணியாக திகழ்வது எப்படி என்பதை கோடிட்டுக்காட்டியுள்ளது. 



உலகளாவிய நிமோனியா பாதிப்பில் 23 சதவிகிதம் பங்களிப்பினை வழங்கும் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அரசு மற்றும் மருத்துவ சமூகத்தினர், இந்தியாவில் நிமோனியா சுமையைக் குறைக்க உறுதியான படிநிலைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் 5 வயதிற்கு கீழ்பட்ட குழந்தைகள் உயிரிழப்புகள் மற்றும் நடத்தைகள் பாதிப்பிற்கு நிமோனியா தொடர்ந்து முதன்மை காரணியாக திகழ்கிறது.

இதுகுறித்து, இந்திய நிமோனியா சங்கத்தின், கோவை மண்டல தலைவர், மருத்துவர் கே.ராஜேந்திரன் கூறியதாவது:-

''கோவையில் வைரல் நிமோனியா 70 சதவிகிதம் அளவிற்கு மிகவும் பொதுவானதாகத் திகழ்கிறது. மீதம் உள்ளவை பேக்டீரியல் தொற்று சார்ந்ததாகத் திகழ்கிறது. பேக்டீரியல் நிமோனியாவில், நுமோக்கொனல் நிமோனியா ஒரு முதன்மை பங்கினை வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் தடுப்பூசிகள் மீதான விழிப்புணர்வு அதிகரித்து வருவதன் காரணமாக பேக்டீரியல் நிமோனியா தாக்குதல் மற்றும் இறப்புகள் கோவையில் வெகுவாகக் குறைந்துள்ளது'' என்றார்.

கோவை மாவட்ட à®‡à®¨à¯à®¤à®¿à®¯ நிமோனியா சங்கத்தின் à®šà¯†à®¯à®²à®¾à®³à®°à¯, மருத்துவர் ஜெயவர்த்தனா கூறுகையில்,

''1 முதல் 2 ஆண்டுகள் வரை பால்கட்டல், சமச்சீர் ஊட்டச்சத்து, மாசுபாடுகளை தவிர்த்தல் மற்றும் தடுப்பூசி ஆகியவைகள் குழந்தைகள் மத்தியில் நிமோனியா தவிர்ப்பிற்கான முக்கிய படிநிலைகளாகும். உயர் இடர்பாடுகள் கொண்ட குறைவான எடையுடன் பிறந்த, நோய் எதிர்ப்புத் திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயமாகும். நிமோனியாவின் தேசிய பாதிப்பு மற்றும் இறப்புகள் குறித்த தரவுகள் இது ஒரு பெரிய சிக்கல் என்பதை உறுதி செய்கிறது. தேசிய நிமோனி நோய் கண்காணிப்பிற்கான தேவையும் நாட்டில் இச்சுமையைக் குறைக்க மிக அத்தியாவசியமாக தேவைப்டுகிறது'' என்றார்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...