வயிற்று பூச்சிகளை வெளியேற்றும் மருத்துவம்

எளிதில் கிடைக்க கூடிய பொருட்கள், சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், சமையலறையில் இருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றுவது குறித்த மருத்துவத்தை காணலாம். கீரி பூச்சி, நாக்கு பூச்சி, நாடா புழு போன்றவை நமது உடலில் தங்குவதால் பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகிறோம்.

இவைகள் நம்முடைய உணவை எடுத்துக்கொள்ளும். ரத்தத்தை உறிஞ்சுவதால் ரத்தசோகை ஏற்படுகிறது. தோல் நோய், வயிற்று புண்களுக்கு இந்த புழுக்கள் காரணமாக அமைகின்றன. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் துன்புறுத்தும் வயிற்று பூச்சிகளை வெளியேற்றுவது அவசியம்.

நாய்கடுகு பொடியை பயன்படுத்தி வயிற்று பூச்சிகளுக்கான மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் நாய்கடுகு பொடியுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலை 30 மில்லி அளவுக்கு இரண்டு நாட்கள் குடிக்க வேண்டும். 3வது நாள் சிறிதளவு விளக்கெண்ணெய் குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.

நாய்கடுகுக்கு நாய்வேளை என்ற பெயர் உண்டு. வயிற்று பூச்சிகளுக்கு மருந்தாக விளங்கும் நாய்வேளை செடியின் இலைகள் மூன்று மூன்றாக இருக்கும். கடுகு செடியை போன்று மெல்லிய காய்களை கொண்டது. மஞ்சள் நிற பூக்களை உடையது. நாய்கடுகு பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். கடுகின் மருத்துவ குணத்தை கொண்டது. குப்பை மேனியை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம்.

குப்பைமேனி செடியின் வேர் பகுதியை எடுத்து சுத்தம் செய்து, இதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி எடுக்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி 50 மில்லி அளவுக்கு வாரம் ஒருமுறை என 3 வாரங்கள் தொடர்ந்து இந்த தேனீரை குடித்த வந்தால் வயிற்று புழுக்கள் வெளியேறும். குப்பைமேனி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. பூச்சி கடிக்கு மேல்பூச்சு மருந்தாகிறது. இதன் வேர் வயிற்று பூச்சிகளை வெளியேற்றும் தன்மை உடையது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...