ஆப்பிளை சாப்பிடுவதால் அப்படி பெரிதாக என்ன கிடைக்கப்போகிறது?

தினமும் ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பதை குழந்தை கூட உணர்ந்து "an apple a day keeps the doctor away" என சொல்லும். சரி ஒரு டாக்டருக்குச் சமமாக சொல்லப்படும் அளவுக்கு அப்படி என்னதான் இந்த ஆப்பிளில் நிறைந்திருக்கிறது?

மிகவும் பரவலாக விளைவிக்கப்படும் இந்த பழத்தை நேரடியாகவோ, ரசமாகவோ, சமைத்தோ அல்லது சாஸ் போன்ற வகைகளிலோ சாப்பிட முடியும். அறவே உப்பு கொழுப்பு அற்ற இது சாப்பிட மிகவும் உகந்தது. இது தவிர வைட்டமின் சி, வைட்டமின் பி கூடுகை, நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

எனவே இதில் நிறைந்துள்ள பத்து முக்கிய ஊட்டச்சத்துக்கள் குறித்து நாம் இப்போது பார்க்கவிருக்கிறோம்.

1. சர்க்கரை நோய்க்கு நல்லது: ஒரு வாரத்திற்கு மூன்று முறை ஆப்பிள் சாப்பிடுபவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஐந்தில் உள்ள பாலிபெனால் என்ற வேதிப்பொருள் மாவுச்சத்துக்களை உறிஞ்சக்கூடியது என்பதுடன் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

2. எடை குறைப்பிற்கு உதவுகிறது: அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி கொண்ட இந்தப் பழம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதில் உதறுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் நீண்ட நேரம் வயிறை நிறைவோடு வைப்பதால் நீங்கள் அதிகம் உண்ணுவதையும் அதனால் எடை கூடுவதையும் தவிர்க்க முடியும்.



3. இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு: ஆப்பிளில் காணப்படும் பைடோநியூட்ரியண்ட்ஸ் எனப்படும் சத்துக்கள் உங்கள் இதய இயக்கத்தை பல்வேறு பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது. இது தவிர ஆப்பிளில் காணப்படும் பெக்டின் என்னும் உட்பொருள் உங்கள் இதயத்தில் அடைப்புகளை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது.

4. எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது: ஆப்பிளில் காணப்படும் போதுமான கால்சியம் சத்து எலும்புகளுக்குத் தேவையான வலிமையத் தருகிறது. மேலும் எலும்புகளை வலுவூட்டி முறிவுகளைத் தடுக்கும் போரான் எனப்படும் கனீமத் சத்தும் இதில் உள்ளது. இதில் காணப்படும் பிளோரித்ஜின் எனப்படும் பிளேவனாய்டுகள் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் மூட்டு அழற்சி நோயை குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் இந்த நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

5. கண்பார்வையை மேம்படுத்தும்: இந்த சத்து நிறைந்த பழம் அதிக அளவில் வைட்டமின் ஏ மற்றும் சி கொண்டுள்ளதால் கண்பார்வையை மேம்படுத்த மிகவும் உதவுகிறது.

6. கல்லீரலை சுத்தம் செய்யும்: இதில் காணப்படும் பெக்டின், உடல் நச்சுக்களை நீக்கும் பண்புகளைக் கொண்டது. அதனால் இது செரிமாணத்தின்போது சேரும் தேவையற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவும். ஒரு சுத்தமான கல்லீரல் உங்கள் செரிமானத்தை சீர் செய்வதோடு தலைவலி மற்றும் ஒவ்வாமை போன்றவற்றில் இருந்து பாதுகாக்கிறது.



7. புற்றுநோயுடன் போராட உதவும்: இதில் காணப்படும் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் பைட்டோகெமிக்கல்கள் போன்ற வேதி பொருட்கள் புற்று நோயால் உடம்பின் செல்களுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுக்காப்பு அளிக்கின்றன. அவை புற்று நோய் வருவதை தடுப்பதோடு புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை தடை செய்து புற்றுநோய் செல்களை வளரவிடாமல் செய்கிறது. ஆப்பிள்கள் குறிப்பாக தொண்டை, நுரையீரல், கல்லீரல் மற்றும் மார்பகப் புற்றுநோய்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன.

8. ஆஸ்துமாவை எதிர்க்க உதவும்: ஒரு வாரத்திற்கு நீங்கள் இரண்டு முதல் ஐந்து ஆப்பிள்கள் வரை உண்டுவந்தால் உங்களுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. இதில் உள்ள பிளேவனாய்டுகள் மூச்சுக்கு குறைபாடுகளின்போது ஏற்படும் இரணங்களை ஆற்றப் பயன்படுகின்றன. வைட்டமின் சி சத்து நுரையீரல்கள் நச்சுக்கள் சேராமல் ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகின்றன.










9. பளிச்சென்ற பற்கள்: ஆப்பிளின் இலேசான அமிலத்தன்மை பற்களில் படிந்திருக்கும் மஞ்ச கறைகளை போக்கி பளிச்சென்ற தோற்றத்தைத் தருகிறது. ஆனால் அதேநேரம் சில பல் பிரச்சனைகள் வராமல் இருக்க ஆப்பிளை உண்டபிறகு வாயை சுத்தம் செய்வதும் அவசியமாகிறது.




10. ஆரோக்கியமான மூளை: இதில் காணப்படும் குவெர்செடின் எனப்படும் ஆன்டி ஆக்சிடென்டுகள் உங்கள் மூளைச் செல்களை பாதுகாத்து இந்த முக்கிய உறுப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஆப்பிள்கள் வலிப்பு மற்றும் இழுப்பு நோய்களின் ஆபத்திலிருந்து ஓரளவிற்கு பாதுகாப்பு அளிக்கிறது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...