கோவையில் 7 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதிப்பு...!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தினசரி தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவையில் 7 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு தினசரி தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் முதன்முதலாக 2020 மாா்ச் மாத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சென்னைக்கு இணையாக நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கொரோனா 2வது அலையின் போது சென்னையை விட கோவையில் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறை, உள்ளாட்சி நிர்வாகங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் நோய்த் தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தினசரி தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கமாக நேற்று குறைந்துள்ளது. புதிதாக 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 879 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.

இதனிடையே, அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 19 போ் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

மேலும், இதுவரை 3 லட்சத்து 71 ஆயிரத்து 161 போ் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 2,617 போ் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். தற்போது 101 போ் சிகிச்சையில் உள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...