கோவையில் குடற்புழு நீக்க மருந்து பெற 4.47-லட்சம் குழந்தைகள் தகுதியானவர்கள்

இதில் 1-முதல் 19-வரை வயதுடைய அனைத்து குழந்தைகள் மற்றும் 20-வயது முதல் 30-வயதுடைய பெண்கள் தவறாமல் குடற்புழு நீக்க முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சிப் பகுதியில் குடற்புழு நீக்க மருந்து பெற 4.47-லட்சம் குழந்தைகள் தகுதியானவர்கள் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் தேசிய குடற்புழு நீக்க வாரம் வரும் நாளை முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 1 முதல் 19 வரை வயதுடைய அனைத்து குழந்தைகள் மற்றும் 20-வயது முதல் 30-வயதுடைய பெண்கள் தவறாமல் குடற்புழு நீக்க முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:-

நாடு தழுவிய குடற்புழு நீக்க வாரம் அனைத்து நகா்நல மையம், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வரும் 21-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9-மணி முதல் 2-மணி வரை நடைபெறவுள்ளது.

1-முதல் 2-வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்பெண்டசோல் 200-மில்லி கிராம் (பொடியாக) கொடுக்க வேண்டும். 2-வயதுக்கு மேல் 5-வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மாத்திரை அல்பெண்டசோல் 400 மில்லி கிராம் வழங்கப்பட வேண்டும். 20-முதல் 30-வயதுடைய பெண்கள் அனைவருக்கும் அல்பெண்டசோல் மாத்திரை கொடுக்கலாம். கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்குக் கொடுக்கக்கூடாது.

குடற்புழு நீக்க மருந்து பெறத் தகுதியான குழந்தைகளின் எண்ணிக்கை 4-லட்சத்து 47-ஆயிரத்து 446- ஆகும். இதில் ஆண் சிறார்களின் எண்ணிக்கை 2-லட்சத்து 32-ஆயிரத்து 898-ஆகும். பெண் சிறார்களின் எண்ணிக்கை 2-லட்சத்து 14-ஆயிரத்து 548-ஆகும். 1 வயது முதல் 2 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 19-ஆயிரத்து 482-ஆகும். 20-வயது முதல் 30-வயது வரை உள்ள பயன்பெறவுள்ள பெண்களின் எண்ணிக்கை 90-ஆயிரத்து 626-ஆகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...