பக்கவாதத்தை முழுமையாக குணப்படுத்த முடியும் - பிசியோதெரபி மருத்துவர் விளக்கம்.


தீபாவளி பண்டிகை கொண்டாடும் இதே நாளில் இந்தாண்டு உலக பக்கவாத தினம் அனுசரிக்கப்படுகிறது. நரகாசுரனை வதம் செய்ய நாளை கொண்டாடும் இந்த நாளில் உலகமெங்கும் மனித உடல்களை வதம் செய்யும் பக்க வாதம் குறித்து அறிந்து கொண்டு நமது உடலை பாதுகாத்து கொண்டால் இந்த தீபாவளி மட்டுமல்லாமல் எல்லா தீபாவளியும் சந்தோசமாக அமையும்.

பக்கவாதத்திற்கான நிரந்தரமாக மருத்துவ தீர்வை தருகிறார் ப்ரண்ட்ஸ் பிசியோதெரபி மருத்துவமனையின் பொது மற்றும் எலும்பியல் பிசியோதெரபி மருத்துவரும் கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவ சங்க செயலாளருமான டாக்டர். ராஜேஸ் கண்ணா :
பக்கவாதம் என்பது தலையிலிருந்து பாதம் வரை உடலின் சரிபாதி (இடது அல்லது வலது பகுதி) செயலிழப்பதாகும்.

மூளைக்கு தேவையான ஆக்ஸிஜனை எடுத்து செல்லும் உதவுவது இரத்தம், அது செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு இரத்தம் செல்லாததாலும் அல்லது உயர் இரத்த அழுத்தால் மூளைக்கு செல்லும் இரத்த குழாய்கள் வெடித்து இரத்த கசிவு ஏற்படுவதாலும் பக்கவாதம் வருகிறது.

பக்கவாத்திற்கான காரணிகள்:

  1. உயர் இரத்த அழுத்தம்
  2. இரத்தத்தில் உள்ள அதிகபடியான கொழுப்பு சத்து.
  3. மது மற்றும் புகை பழக்கம்
  4. சர்க்கரை நோய்
  5. இருதய நோய்
  6. மன அழுத்தம்
  7. உடல் பருமன்

பக்கவாத்திற்கான அறிகுறிகள்:

  1. உடலின் சரிபாதி பகுதியில் மரமரப்பு.
  2. மன குழப்பம் மற்றும் தீராத தலை வலி.
  3. முகம் கோணல் மற்றும் பேச்சில் தெளிவின்மை.
  4. கை மற்றும் காலை தூக்க முடியாமை
  5. நடக்க முயற்சிக்கும் போது தள்ளாடுதல் மற்றும் தலை சுத்தல்.

பக்கவாதத்தால் ஏற்படும் கை மற்றும் கால் செயலிழப்பை தடுக்கலாம்:

மேலே குறிப்பிடபட்டுள்ள அறிகுறிகள் தெரியும் பொழுது உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பக்கவாதம் உடலில் ஊனத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்து விட கூடாது.

மருத்துவமனைக்கு அறிகுறிகள் தெரிந்து 4 மணி நேரத்திற்குள் கொண்டு செல்லும் பட்சத்தில் கை மற்றும் கால் முழுவதும் செயல் இழக்காமல் தடுக்க முடியும்.

இரத்தம் செல்லும் பாதையை அடைக்கும் இரத்த கட்டிகளை கரைக்கும் மருத்தை ஊசியின் மூலம் செலுத்தி கரைத்து இரத்த குழாய்யை சீராக்கி மூலைக்கு ஆக்சிஜன் கிடைக்க செய்யும் சிகிச்சை முறை அல்லது அறுவைசிகிச்சை மூலம் குணபடுத்தலாம்.

பக்கவாதத்திற்கு நிரந்தர குணபடுத்த முடியும் :

சிலருக்கு மருத்து மற்றும் அறுவை சிகிச்சை மூலம் பக்கவாதத்தை குணபடுத்த முடியாது.

சிலர் காலதாமதமாக மருத்துவனைக்கு செல்லும் போது கை மற்றும் முற்றிலும் செயலிழந்து விடும்.

பக்கவாதத்தால் கை மற்றும் கால் செயலிழந்துவிட்டால் பிசியோதெரபி மருத்துவம் ஒன்று மட்டுமே இந்த நோயிற்கான ஒரே தீர்வு.
 
பிசியோதெரபி சிகிச்சை மூலம் செயலிழந்த கை மற்றும் கால்களின் தசைகளின் பலத்தை திரும்ப கொண்டு வந்து படுத்துக் படுக்கையாக இருக்கும் நோயாளியேயும் நடக்க வைக்க முடியும். பக்கவாதத்தால் வரும் முகவாத்தையும் முழுமையாக குணப்படுத்த முடியும். கை மற்றும் கால் செயலிழப்பு தெரிந்த உடனே பொது அல்லது நரம்பியல் பிசியோதெரபி மருத்துவரிடம் சிகிச்சை எடுப்பதன் பக்கவாதம் வந்த சுவடே தெரியாதவாறு முழுமையாக குணப்படுத்த முடியும்.

பக்கவாதம் வராமல் தடுக்க முடியும்:
  1. கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். குறிப்பாக எண்ணெயில் பொறித்த உணவு பொருட்கள்.
  2. மது மற்றும் புகை பழக்கத்தை கைவிடுதல்
  3. கோபப்படுவதை தவிர்த்து யோகா, தியானம், மூச்சு பயிற்சியில் ஈடுபடவது நல்லது.
  4. நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி
  5. சர்க்கரை நோயாளிகள் 3 மாததிற்கு ஒருமுறை இரத்த கொழுப்பின் அளவை கண்டறிந்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  6. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதை குறைக்க உடற்பயிற்சியும் நடைபயிற்சியும் மேற்கொள்வது அவசியம்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...