தீபாவளிக்கு சர்க்கரை நோயாளிகளும் இனிப்பு சாப்பிடலாம், பிசியோதெரபி மருத்துவர் விளக்கம்

தீபாவளி பண்டிகை என்றாலே பலவிதமான இனிப்புகளை சுற்றதாரோடும் உறவினர்களோடும் பகிர்ந்து நமது மகிழ்ச்சியை வெளிபடுத்துவது வழக்கம். பலரது  à®‡à®²à¯à®²à®¤à¯à®¤à®¿à®²à¯ "இந்த தீபாவளிக்கு எந்த இனிப்பு செய்யலாம்" என பட்டிமன்றமே நடக்கும். ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒவ்வொரு தீபாவளியும் கசப்பான தீபாவளியாகவே அமைகிறது.

இப்போது குடும்பத்தில் ஒருவருக்காவது சர்க்கரை நோய் இல்லாமல் இல்லை. அவர்களும் ஆண்டு முழுவதும் பத்திய சாப்பாடு  à®šà®¾à®ªà¯à®ªà®¿à®Ÿà¯à®ªà®µà®°à¯à®•ள் போல் உப்புசப்பில்லா உணவு வகைகளை உட்கொண்டு வருகிறார்கள். அவர்களும் மற்றவர்களை போல தீபாவளி அன்று இனிப்பு சாப்பிட்டு சந்தோசமாக தீபாவளியை கொண்டாட வேண்டாமா? இதோ அதற்காக வழிமுறைகளை சொல்கிறார் ப்ரண்ட்ஸ் பிசியோதெரபி மருத்துவமனையின் பொது மற்றும் எலும்பியல் பிசியோதெரபி மருத்துவரும் கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளருமான டாக்டர்.ராஜேஸ் கண்ணா:

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சாதரணமாக இனிப்பு உட்கொள்ளும் போது இனிப்பிலுள்ள நேரடி சர்க்கரை இரத்த சர்க்கரையின் அளவை உடனே அதிகரிக்கும். திடீர் இரத்த சக்கரை உயர்வால் மாரடைப்பு, பக்க வாதம், சிறுநீரக செயலிழப்பு, நூரையீரல் தோற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவேதான் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிட கூட என கூறுகிறார்கள்.

அதேபோல் இரத்த சர்க்கரை அளவை தீர்மானிப்பதில் இனிப்பு சக்தியின் அளவு (கலோரி) முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரை நோயாளியின் ஒரு நாளுக்கான சராசரி உணவு சக்தியின் அளவு 1500 - 1800 கலோரி. எனவே இனிப்பின் அளவு ஒரு நாளுக்கு 400 கலோரிக்கு அதிகமாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடும் போது கவனிக்க வேண்டியவை:

‌கடைகளில் இனிப்பு வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

‌சில்வர் உறையால் மூடப்பட்ட இனிப்பு பொருட்களை தவிர்க்க வேண்டும். இதனால் வயிற்று புண், தொண்டை எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. 

‌உணவு அருந்தி 2 மணி நேரம் கழித்தே இனிப்பு சாப்பிட வேண்டும். இரவு சாப்பாடிற்கு பின் இனிப்பு சாப்பிட கூடாது.

‌ இனிப்பு சாப்பிடும் அன்று மாத்திரைகள் இன்சுலின் ஊசி ஆகியவை தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும். 

‌எண்ணெயில் பொறித்த, பால் மற்றும் நெய்யில் செய்த இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும். அதிக சுவையுடைய மைசூர் பாக் போன்ற இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளும் இனிப்பு சாப்பிட்ட பின் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள்:

1.இனிப்பு சாப்பிடும் அன்று வழக்கத்தை விட இரண்டு மடங்கு நடைபயிற்சியும் உடற்பயிற்சியும் அவசியம்.

2.இனிப்பு சாப்பிடுவதற்கு ஏற்றால்போல் உடல் இயக்க வேலைகளை அதிகம் செய்ய வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்பு வகைகளும் அதனால் உயரும் இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்தும் உடற்பயிற்சிகளும்:

1.குலோப்ஜாமுன்- 2 சாப்பிடலாம் - 387 கலோரி

உடற்பயிற்சி : இனிப்பு சாப்பிட்டவுடன் 30 நிமிடம் மாடி படி ஏறி இறங்கும் பயிற்சி அல்லது 30 நிமிட மிதவேக ஓட்டம்.

2.ஜிலேபி - 2 சாப்பிடலாம் - 300 கலோரி

உடற்பயிற்சி : இனிப்பு சாப்பிட்டவுடன் 25 நிமிடம் நடனம் ஆடலாம் அல்லது 20 நிமிட மித வேக ஓட்டம்.

3.லட்டு - 2 சாப்பிடலாம் - 370 கலோரி

உடற்பயிற்சி : இனிப்பு சாப்பிட்டவுடன் 40 நிமிட நடை பயிற்சி அல்லது 20 நிமிட சைக்கிளில் மிதித்தல்.

4.ஹல்வா - 100 கிராம் சாப்பிடலாம் - 150 கலோரி

உடற்பயிற்சி : இனிப்பு சாப்பிட்டவுடன் 15 நிமிடம் வீட்டு வேலைகளை செய்தல் அல்லது நடை பயிற்சி.

5.ரசகுல்லா - 2 சாப்பிடலாம்  - 200 கலோரி

உடற்பயிற்சி : இனிப்பு சாப்பிட்டவுடன்   30 நிமிடம் சைக்கிள் மிதித்தல் அல்லது நடைபயிற்சி

6.பாயசம் - 100 கிராம் சாப்பிடலாம்  - 250 கலோரி

உடற்பயிற்சி : இனிப்பு சாப்பிட்டவுடன் 30 நிமிட மிதவேக ஓட்டம்.

(குறிப்பு: உடற்பயிற்சி முடிந்து 30 நிமிடம் கழித்து இரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்து பார்த்தால் சீராக இருக்கும்)

இதுமட்டுமின்றி பிசியோதெரபி மருத்துவத்தின் மூலம் சர்க்கரை நோயினால் ஏற்படும் தோள்பட்டை மூட்டு இறுக்கம், கை மற்றும் கால் மதமதப்பு , எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த முடியும். மேலும் மாத்திரைகள் மற்றும் இன்சூலின் ஊசியில்லாமல் பிசியோதெரபி சிகிச்சை மூலம் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க முடியும். சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்துவமும் இதில் உண்டு என்கிறார் மருத்துவர் ராஜேஷ் கண்ணா.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...