பப்பாளியில் நிறைந்திருக்கும் பலவித பயன்கள்!

அனைத்துக் காலங்களிலும் கிடைக்கும் பழம் தான் பப்பாளி. மலிவு விலையில் கிடைக்கும் பப்பாளி பழத்தில் நம் ஆரோக்கியத்திற்கு அவசியமான சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.  

 

பப்பாளியில் நிறைந்திருக்கும் சில மருத்துவ குணங்கள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

பப்பாளியில் அதிகளவில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் ஏ, சி, இ போன்ற உடம்புக்கு ஆரோக்கியமான சத்துகள் நிறைந்திருக்கின்றன.

 

பப்பாளிப் பழம் மட்டுமின்றி, பப்பாளிக் காயும் சாப்பிடுவதற்கு உகந்தது. பப்பாளிக் காயை தினமும் கூட்டாக சமைத்துச் சாப்பிட்டு வந்தால், குண்டான உடல் படிப்படியாகக் குறையும்.

 

நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை கூழாகப் பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூச வேண்டும். நன்கு ஊறியதும் வெந்நீரால் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மாறி, முகம் அழகுபெறும்.

 

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால், வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகள் அழிந்து, வயிற்றுப்புண்கள் குணமாகும்.

 

பப்பாளிக் காயை குழம்பு வைத்து, பிரசவித்த பெண்கள் அதை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால், பால் சுரப்பு அதிகமாகும்.

 

குழந்தைகளுக்குத் தினமும் பப்பாளிப் பழத்தைக் கொடுத்தால், குழந்தைகளின் உடல் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பல், எலும்பு போன்றவை வலுவாகும்.

 

தினமும் பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

 

பப்பாளிப் பழத்தை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப்புண்கள் மேல் தடவி வந்தால், புண்கள் விரைவில் ஆறிவிடும்.

 

பப்பாளிப் பழத்தை நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், கண் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகளையும், புற்று நோய் அபாயத்தையும் தவிர்க்கலாம் என்பது உணவியல் நிபுணர்களின் கருத்து.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...