கிணத்துக்கடவு அருகே 10-ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

கிணத்துக்கடவு அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அரசு பள்ளியில் நடைபெற்று வந்த ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்பட்டு ஆசிரியர்கள் அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.


கோவை: கிணத்துக்கடவு அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி- ஆன்லைன் வகுப்பு நிறுத்தம்

கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் காளியண்ணன்புதூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 29 ஆசிரிய- ஆசிரியர்களும், 649 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடுத்துள்ளது. இதனால் தற்போது மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் வகுப்பு நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு காளியண்ணன் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்து வந்தது.

இந்நிலையில் அந்த பள்ளியில் உள்ள 19 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 9 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



ஒரே பள்ளியில் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அரசு பள்ளியில் நடைபெற்று வந்த ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்பட்டு ஆசிரியர்கள் அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.



இதனையடுத்து, பள்ளியில் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் கோவில்பாளையம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அரசு பள்ளி வகுப்பறைகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி, பிளிச்சிங் பவுடர் பள்ளிவளாக பகுதியில் தூவும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...