உலக உடல் பருமன் தினம்



உலக உடல் பருமன் தினத்தையொட்டி கோவை ஜெம் மருத்துவமனையின் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் அறுவை சிகிச்சை துறையின் தலைமை மருத்துவர் பிரவீன் ராஜ் சிம்ப்ளிசிட்டி நிருபர்களிடம் அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கூறியது:-

உலக உடல் பருமன் தினம் ஆண்டு தோறும் அக்டோபர் 26ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உடல் பருமன் என்பது உடல் எடை அதிகமாக இருப்பது மட்டுமல்ல, ஒரு மனிதனின் உடல் எடை அவரது உயரத்திற்கு அதிகமான எடையே கொண்டுள்ளதே உடல் பருமன் என்று செல்லப்படுகிறது. அதாவது, ஒரு நபர்கள் 190 செமீ உயரம் உள்ளபோது அவரது எடை 90 கிலோ உள்ள நிலையில் அவருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அதே சமயம் 180 செமீ உயரம் உடையவர்கள் 90 கிலோ எடை உள்ள நிலையில் அவருக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. எனவே, ஒரு மனிதனின் உடல் எடையை கொண்டு உடல் பருமன் கணக்கிட முடியாது. அவரது உயரம் கொண்டு உடல் பருமன் கணக்கிட முடியும். அதற்கு, பாடி மாஸ் இண்டெக்ஸ் (BMI/பிஎம்ஐ) மூலமாக ஒரு மனிதனின் உடல் பருமன் காணப்படுகிறது.

பாடி மாஸ் இண்டெக்ஸ் (BMI/பிஎம்ஐ) என்றால் என்ன?

இது உடல் பருமனின் அளவீடு. எடையால் மட்டுமே உடல் பருமனை கண்டறிய முடியாது, ஏனெனில் அது நபரின் உயரத்தை கருத்தில் கொள்வதில்லை.

பிஎம்ஐ = எடை (கிலோ) / உயரம் 2 மீட்டர்கள்)

  • ஒரு மனிதனுக்கு வழக்கமான பிஎம்ஐ 18.5 முதல் 25 ஆகும்.
  • பிஎம்ஐ, 18.5-க்கும் குறைவாக இருந்தால் அது குறைஎடை.
  • பிஎம்ஐ, 25 முதல் 30 வரை இருந்தால் அது மிகைஎடை.
  • பிஎம்ஐ, 30 முதல் 40 வரை இருந்தால் அது பருமன்.
  • பிஎம்ஐ, 40-க்கும், அதற்குமேல் இருந்தால் அதிக பருமன் ஆகும்.


ஒரு மனிதனுக்கு வழக்கமான பிஎம்ஐ அதிகமாக அதிகமாக உடலில் நோய்கள் வர வாய்ப்புள்ளது. சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, அதிக கொழுப்பு சத்து, மாதவிடாய் பிரச்னை, மலட்டுத்தன்மை போன்ற நோய்களாலும், சிலவகையில் புற்றுநோய் மூலமாகவும் உடல் பருமன் நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆராய்ச்சிகளில் சொல்லப்பட்டு வருகிறது. உடல் எடையை கட்டுப்படுத்தவில்லை என்றால், உடல் பருமன் வருவதற்கு வாய்ப்புள்ளது. உலக அளவில் இந்திய உடல் பருமனில் மூன்றாவது இடத்திலும், சர்க்கரை நோயில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. உடல் பருமனில் தமிழ்நாடு இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது. இதில் பஞ்சாப் முதலிடத்திலும், கேரளா இரண்டாவதும், ஆந்திரா முன்றாவது இடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டில் உடல் பருமனில் ஆண்கள் 20 சதவீதமும், பெண்கள் 25 சதவீதமும் கொண்டுள்ளனர். உலக சுகாதார மையம், அமெரிக்கன் டைபட்டாலஜி அசோசியேஷன் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அனைவரும் உடல் பருமன் என்பது ஒரு நோய் என்றே குறிப்பிடுகின்றனர். உடல் பருமன் நோய் மரபணுவில் வரக்கூடிய நோய் அல்ல. இது மனிதர்கள் தன்னை எப்படி பராமரித்து கொள்வது என்பதில் தான் உள்ளது. மேலும் உடல் எடையை குறைக்க உணவின் அளவு மேற்கொள்ள வேண்டும். துரித உணவுகள் இந்தியாவில் அதிகமாக உள்ளது. அதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும். நமது உடல் பராமரிக்க உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதுவே உடல் பருமன் வராமல் தடுக்க முதல் தீர்வாக உள்ளது. 

மேலும், சரியான அளவில் உணவு மேற்கொண்டும், நடை பயிற்சி மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லை என்றால் அவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி (பேரியாட்ரிக்ஸ் சர்ஜரி) செய்யப்படுகிறது. லேப்ராஸ்கோப்பி மூலமாக இரைப்பை மற்றும் குடலில் இந்த சிகிச்சை செய்வதன் மூலமாக அவர்களால் அதிகமாக சாப்பிட முடியாது. இதன் மூலமாக அவர்களின் எடையை குறைக்க முடியும். எனவே உடல் பருமன் நோய் வராமல் தடுப்பதற்கு நமது உடலை நாம் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதன் மூலம் நமது உடலில் பல்வேறு நோய்கள் வராமலும் தடுக்க முடிகிறது. உடல் ஆரோக்கியமாக இருப்பதன் மூலமாக நோய் தடுப்பில் நம்மை பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்றார்.   

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...