கோவையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேருக்கு கொரோனா

கோவை ரயில்வே போலீஸ் நிலையத்தில் பணியாற்றக்கூடிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.


கோவை: கோவை ரயில்வே போலீஸ் நிலையத்தில் பணியாற்றக்கூடிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தமிழகம் உட்பட கோவை கொரானா மூன்றாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று கோவை ரயில்வே போலீஸ் நிலையத்தில் பணியாற்றக்கூடிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ரயில்வே போலீஸ் நிலையம் முழுவதும் சுகாதார தடுப்பு பணிகள் மற்றும் கிருமினாசிகள் தெளிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டது.

மனு கொடுக்க வருபவர்களுக்கு என தனி அறை ஒதுக்கப்பட்டது. வாசலிலேயே மனுக்களைப் பெற வசதி செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கு பணியாற்றக் கூடிய அனைத்து காவலர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதனால் மக்கள் மத்தியில் தொடர்ந்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...