அன்னூர் காவல் நிலையத்தில் ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா தொற்று

அன்னூரில் நேற்று 48 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முன்களப்பணியாளர்களான காவலர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


கோவை: அன்னூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முன்களப்பணியாளர்களான காவலர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் சக காவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றானது தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணமாக உள்ளது.குறிப்பாக கோவை மாவட்டத்தில் ஜெட் வேகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3082 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.955 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் தொழிற்சாலைகள் நிறைந்துள்ள அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று 48 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அன்னூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முன்களப்பணியாளர்களான காவலர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் சக காவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...