கோவையில் ஒரே நாளில் 10 போலீசாருக்கு கொரோனா தொற்று..! காவல் நிலையங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

ரத்தினபுரி, வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையங்களில் தலா ஒருவர் என மொத்தம் 10 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டோர் வீட்டு தனிமையிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: கோவையில் கொரோனாவின் 3-வது அலை தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, தகுதி உடையவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் பொது இடங்களுக்குச் செல்லும்போது முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை மாநகரில் உள்ள 15 காவல் நிலையங்களில் பணியாற்றும் 70-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கடந்த 10 நாட்களாக தொடர்ந்து தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள காவல் நிலையங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.



இதனால், மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல் நிலையம் முன்பு கூடாரம் அமைத்து சமூக இடைவெளியை பின்பற்றி புகார்களை பெற்று போலீசார் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கோவை மாநகர குற்றப் பிரிவில் பணியாற்றும் 5 போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பிரிவு மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ரத்தினபுரி, வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையங்களில் தலா ஒருவர் என மொத்தம் 10 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோர் வீட்டு தனிமையிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...