ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் 5 பாட்டி வைத்தியம்!!

உடலில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நம்மிடம் இருக்கும் இயற்கை பொருகளே மருந்தாக பயன்பெறுகிறது. காய்ச்சல் அஜீரணம், என உபாதைகளுக்கு இந்த எளிய பொருட்களைக் கொண்டே சரி செய்யுங்கள். பக்க விளைவுகள் ஏற்படாது.

ஆரோக்கியமான உணவு உண்டாலும் உடலில் சின்ன சின்ன உபாதைகள் வரத்தான் செய்யும்.

அதற்கு மருந்து மாத்திரை என தேடி மெடிக்கல் ஷாப் செல்லத் தேவையில்லை. வீட்டிலேயே நீங்கள் சரிப்படுத்திக் கொள்ளலாம்.

இயற்கையான நமது பாட்டி வைத்தியங்களால் எந்த வித பாதிப்பும் இல்லாமல் குணப்படுத்த முடியும். உங்களுக்கான எளிய தீர்வுகள் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. தொடர்ந்து படியுங்கள்.

அஜீரணத்திற்கு:



அஜீரணம் மற்றும் வயிற்று மந்தத்திற்கு சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. சாப்பிட்டவுடன் பலனளிக்கும்.

கொழுப்பு குறைய:







உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.

வயிற்றுப் போக்கிற்கு:







ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

உடல் வலி நீங்க:







சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்த்து வர உடம்பு வலி நீங்கும்.

மூளை பலம் பெற:



துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

தொண்டை புண்ணிற்கு:



தொண்டையில் புண், வலி ஏற்பட்டால் கொஞ்சம் சித்தரத்தைப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிடவும். தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...