முழங்கால் மற்றும் மூட்டுக்களின் ஆரோக்கியத்தைப் புதுப்பிக்க இதை தினமும் 2 டீஸ்பூன் சாப்பிடுங்க


முழங்கால் மற்றும் மூட்டுகளின் செயல்பாட்டை சீராக்கவும், எலும்புகளின் அமைப்பை மேம்படுத்தவும், மூட்டுகளில் உள்ள தசைநார்களை வலிமையாக்கவும் ஓர் அற்புத மருந்து ஒன்று உள்ளது.

ஆரோக்கியமற்ற உடல் நிலைகள் தான் மூட்டுகள், கால் மற்றும் முதுகுப் பகுதிகளில் வலி மற்றும் இதர பிரச்சனைகளை உண்டாக்குகின்றன. இது அப்படியே நீடித்தால், அதனால் பல்வேறு தீவிர பிரச்சனைகளுக்கு உள்ளாகக்கூடும். எனவே மூட்டு, முதுகு, கால் பகுதிகளில் வலி ஏற்பட்டால், அதை உடனே சரிசெய்ய முயல வேண்டும்.

தேவையான பொருட்கள்:

உலர் திராட்சை - 3 டேபிள் ஸ்பூன்.
ஜெலட்டின் - 2 டேபிள் ஸ்பூன்.
ஆளி விதை - 8 டீஸ்பூன்.
எள் - 4 டேபிள் ஸ்பூன்.
பூசணி விதை - 2 டேபிள் ஸ்பூன்.
தேன் - 200 கிராம்.

தயாரிக்கும் முறை:

ஒரு பெரிய பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின் அதனை ஒரு கண்ணாடி பௌலில் போட்டு சேகரித்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

இந்த கலவையை தினமும் காலை உணவிற்கு முன் ஒரு டீஸ்பூன் மற்றும் மதிய உணவிற்கு முன் ஒரு டீஸ்பூன் என சாப்பிட வேண்டும்.

நன்மைகள்:

இந்த சிகிச்சையை மேற்கொண்டால், நம் எலும்புகளை இணைக்கும் மூட்டுப் பகுதியில் உள்ள தசைநார்களின் நெகிழ்வுத்தன்மை மேம்படும் மற்றும் எலும்புகளும், மூட்டுக்களும் வலிமையடையும். அதுமட்டுமின்றி, இது உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, உடல் எடையையும் குறைக்க உதவும்.

குறிப்பு:

இதுவரை மூட்டு பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகளை எடுத்து வருபவராயின், அவற்றை நிறுத்திவிட்டு, இந்த இயற்கை வழியைப் பின்பற்றும் முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...