கோவை காட்டூர் காவல் நிலையத்தில் 3 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி..!

இதனை தொடர்ந்து, காட்டூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


கோவை: கோவை காட்டூர் காவல் நிலையத்தில் 3 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை காந்திபுரம் காட்டூர் போலீஸ் நிலையத்தில் 3 போலீசாருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 3 போலீசாருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதை அடுத்து அவர்கள் 3 பேரும் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர், காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, காட்டூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசாருக்கு அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...