கோவை சீனிவாசபுரத்தில் உள்ள மாநகராட்சி கொரோனா மையத்தில் 36 பேர் அனுமதி

சீனிவாசபுரத்தில் உள்ள மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மையத்தில், ஒரே நாளில் 36 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: கொரோனா தொற்று மற்றும் உருமாறிய ஒமைகரான் தொற்று நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவையில் நேற்று 300 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகரிக்கும் கொரோனா தொற்றால், கோவையில் கோவிடிட் கேர் சென்டர் Covid Care Centre) மற்றும் சோதனை மையங்கள் (Triage Centres) துவங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை கொடிசியா வளாகத்தில் 300 படுக்கைகள் அமைக்கபட்டுள்ளது இதில், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும் அடங்கும். மேலும் , சீனிவாசபுரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் 50 படுக்கைகளும், இராமநாதபுரம், அரசு தொழில்நுட்ப கல்லூரி, அரசு கலை கல்லூரி, வரதராஜபுரம் சமுதாய கூடம், சரவணம்பட்டி சமுதாய கூடம் என கோவையின் முக்கிய பகுதிகளில் மருத்துவ மையங்கள் துவங்கபட்டுள்ளது.

அதில், இன்று சீனிவாச கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மையத்தில், ஒரே நாளில் 36 கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...