கோவையில் மூன்று மருத்துவர்கள் உட்பட 5-பேருக்கு கொரோனா உறுதி

கோவையில் தனியார் கிளினிக்கில் பணிபுரியும் மூன்று மருத்துவர்கள் உட்பட 5-பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் தனியார் கிளினிக்கில் பணிபுரியும் மூன்று மருத்துவர்கள் உட்பட 5-பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா 3-வது அலை அலை தொடங்கி உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. சென்னை, கோவை உட்படத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கடந்த 4 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

கோவை மாவட்டத்திலும், நகரிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் ஐந்தாவது வீதியில் செயல்பட்டு வரும் தனியார் கிளினிக்கில் பணிபுரியும் மருத்துவர்கள் ஊழியர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் மூன்று டாக்டர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிளைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் கடை வியாபாரிகள் உள்ளிட்டோருக்கும் கொரோனா சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் நகரின் முக்கிய பகுதியில் 3 டாக்டர்கள் உட்பட 5-பேருக்கு ஒரே இடத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...