எலும்புப்புரை நோயை அலட்சிய படுத்தினால், எதிர்காலம் பாதிக்கப்படும் - பிசியோதெரபி மருத்துவர் விளக்கம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ம் தேதி, உலகம் முழுவதும் எலும்புப்புரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக எலும்புப்புரை நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நோய் ஏறக்குறைய அனைத்து பெண்களின் உடலையும் புற்றீசல் போல் அரிக்கும் தன்மையுடையது. இந்த எலும்புப்புரை நோய் குறித்து பிசியோதெரபி மருத்துவர் ராஜேஸ் கண்ணா அவர்கள் சிம்ப்ளிசிட்டி செயலியில் பகிர்ந்து கொண்ட போது, 

ப்ரண்ட்ஸ் பிசியோதெரபி மருத்துவமனையின் பொது மற்றும் எலும்பியல் பிசியோதெரபி மருத்துவரும் கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளருமான டாக்டர். ராஜேஸ் கண்ணா கூறுகையில்:-

எலும்புப்புரை நோய் (Osteoporosis) என்பது அதிகமாக எலும்பு முறிவு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு எலும்பு சம்பந்தப்பட்டநோய் ஆகும். எலும்புப்புரையினால் உடலில் எலும்புத் தாது அடர்த்தி (Bone Mineral Density) குறைவதும், எலும்பு நுண்ணியக் கட்டமைப்பு தகர்க்கப்படுவதும் நிகழ்கிறது.எலும்புப்புரை மாதவிடாய் நிற்றலுக்குப்பிறகு பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. அதனால் இதுமாதவிடாய்க்கு பிந்தைய எலும்புப்புரை என்றழைக்கப்படுகிறது. இது ஆண்களுக்கும், குறிப்பிட்ட இயக்குநீர் (hormone) சீர்குலைவுகள், நாட்பட்ட நோய்கள் இருக்கும் எவருக்கும் ஏற்படலாம். 

இதில் எளிதில் ஏற்படும் எலும்பு முறிவின் ஆபத்து இருப்பதினால் எலும்புப்புரை, குறிப்பாக ஆயுள் எதிர்பார்ப்பு மற்றும் வாழ்க்கைத்தரத்தை பாதிக்கலாம்.
எலும்புப்புரைக்கு எந்த ஒரு குறிப்பிட்ட அறிகுறிகளும் இல்லை. எலும்பு முறிவுகளின் ஆபத்து அதிகரிப்பதே அதனுடைய முக்கிய விளைவாகும். ஆரோக்கியமானவர்களுக்கு பொதுவாக எலும்பு உடைதல் ஏற்படாது. அப்படியிருக்கும் சூழ்நிலைகளில் எலும்புப்புரையினால் எலும்புமுறிவுகள் ஏற்படும். அதனால் இவைகளை எளிதில் முறியும் எலும்பு முறிவுகள் என்று கூறப்படுகிறோம். எளிதில் ஏற்படும் எலும்பு முறிவுகள் பொதுவாக முதுகுதண்டு எழும்பு , விலா எலும்பு, இடுப்பு மற்றும் மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் ஏற்படும்.

முதுகு தண்டுவட பகுதியில் ஏற்படும் எலும்புப்புரையை அலட்சிய படுத்தினால் தண்டுவட எலும்பு முறிந்து முதுகுதண்டுவடத்தை அழுத்தும் இதனால் இரண்டு கை மற்றும் கால்கள் அல்லது இரண்டு கால்கள் மட்டும் செயல் இழந்து நோயாளி படுத்தபடுக்கையாக ஆகிவிடுவார். இதனால் அவர்களால் எந்த செயலையும் செய்யமுடியாமல் பெறபட்ட ஊனத்துடன் வாழ்க்கையை நகர்த்தகூடிய சூழலுக்கு தள்ளுபடுகிறார்கள்.



எலும்புரை நோய் காரணிகள்:

பெண்களுக்கு மாதவிடாய்க்கு பிறகு ஏற்படும் இயக்குநீர்(hormone) மாற்றம், மது மற்றும் புகை பழக்கம், வைட்டமின் டி குறைபாடு, கால்சியம் சத்து குறைவான உணவு பழக்கம், உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சியின்மை, வலி மாத்திரைகள் அதிகம் பயன்படுத்துவது, குணபடுத்தாத நாள்பட்ட வலி.

முன்னெச்சரிக்கை அறிகுறிகள் :


மூன்று மாததிற்கு மேலாக முதுகு அல்லது கழுத்து வலி, வலி ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு பரவுவது குறிப்பாக கழுத்து பகுதியிலிருந்து கைக்கும் அல்லது இடுப்பு பகுதிலிருந்து காலுக்கும் பரவும், முதுகுதண்டு கூண் விழுதல், உடலின் உயரம் குறைதல், மாதவிடாய் பிறகு ஏற்படும் முதுகு வலி, நிற்க முடியாமல் கீழே விழ போன்ற உணர்வு, கை அல்லது கால் மரப்புதன்மை, கை மற்றும் கால்கள் செயலிழக்கும் அபாயம்.

எளிய முறையில் எலும்புப்புரையை குணபடுத்தலாம்!

உங்களுக்கு எச்சரிக்கை அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அருகிலுள்ள பொது அல்லது எலும்பியல் பிசியோதெரபி மருத்துவரை அணுகி ஆரம்ப கட்ட சிகிச்சைகள் மேற்கொள்வதன் மூலம் குணபடுத்தலாம். பிசியோதெரபி சிகிச்சையின் மூலம் முதுகு தண்டுவட எலும்புகளுடையாக இறுக்கம் தளர்த்தபடுவதால் முதுகுதண்டுவட அழுத்தம் விடுபடுகிறது. இதன் மூலம் முதுகு மற்றும் கழுத்து வலி குணமடைகிறது. இதன் மூலம் கை மற்றும் கால் செயலிழப்பு முழுமையாக தடுக்க படுகிறது.
அதேபோல் பிசியோதெரபி மருத்துவத்தின் மூலம் முதுகு தசைகள் வலிவூட்டபடுவதால் பலவீனமான எலும்பு வழியாக கடத்தபடும் எடையை வலிமை வாய்ந்த தசைகளே கடத்துவதால் எலும்பு முறிவு தடுக்க படுகிறது. வயது முதிர்வினால் ஏற்படும் எலும்புப்புரை நோயையினால் ஏற்படும் எழுந்து நிக்க,நடக்க முடியாத நிலையையும் பிசியோதெரபி மருத்துவதால் முழுமையாக குணப்படுத்த முடியும். இதனால் வயது முதிர்வினால் ஏற்படும் இடுப்பு எலும்பு முறிவை முற்றிலும் தடுக்க முடியும்.

எலும்புப்புரையை தடுக்கும் வழிமுறைகள் :

-30 வயத்திற்கு மேற்பட்ட பெண்கள் 6 மாததிற்கு ஒரு முறை எலும்பு சத்து குறைபாடை கண்டறியும் எலும்பு அடர்த்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  (குறிப்பாக மெலிந்த உடல்வாகு  உடையவர்கள்)

-கால்சியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்களான பால்,பால் சார்ந்த உணவு பொருட்கள்,மீன்,கேழ்வரகு (ராகி), எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு, திராட்சை பழங்கள் மற்றும் கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது குறிப்பாக பெண்கள் கர்பகாலத்திலும் குழந்தைக்கு பாலூட்டும் காலத்திலும் அவசியம் சேர்த்து கொள்ள வேண்டும்.

-மது மற்றும் புகை பழக்கத்தை விடுதல்.

-வைட்டமின் டி யை அதிகம் கொடுக்கும் காலை வெயிலில் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி.

-வலி மாத்திரைகளை குறிப்பாக ஸ்டிராய்டு மாத்திரை தவிர்த்து உடலில் ஏற்படும் வலிகளுக்கு பக்க விளைவுகள் இல்லாத பிசியோதெரபி சிகிச்சை முறையை மேற்கொள்வது.

-முதுகு மற்றும் கழுத்து வலி இருக்கும் பட்சத்தில் ஆரம்பகட்டதிலேயே பிசியோதெரபி சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் எலும்புப்புரை நோய் வராமல் தடுக்கலாம்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...