கோவையில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி; இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதி

இங்கிலாந்து நாட்டிலிருந்து, வந்த 69 வயது முதியவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான தொண்டை வலி மட்டும் உள்ளதாகவும், அவரது குடும்பத்தாருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 118 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், விமானம் மூலமாக தமிழகம் வரக்கூடிய பயணிகளிடம் தொடர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஹை ரிஸ்க் (high risk) நாடுகள் என்று கண்டறியப்பட்டுள்ள நாடுகளிலிருந்து வரக்கூடியவர்களுக்கு சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 20 ஆம் தேதி இங்கிலாந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த 69 வயது முதியவருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரது சளி மாதிரிகள் மேல் பரிசோதனைக்காக சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரை ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு அவர் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே, அவருக்கு ஏற்பட்டுள்ளது ஒமிக்ரான் என்ற கொரோனா தொற்று என்று சுகாதாரத்துறை உறுதி செய்ததையடுத்து, அவர் இன்று கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஒமிக்ரான் பாதித்துள்ள முதியவருக்கு, தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டிருக்கும் அவருக்கு லேசான தொண்டை வலி மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவருடன் இருந்த குடும்பத்தினருக்கு இரண்டாவது முறையாக பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவுகளின் அடிப்படையில், அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருந்தால் அவர்களும் சிகிச்சைக்காக அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கோவையில் முதல் முறையாக ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...