இஞ்சி ஜூஸில் மஞ்சள் தூள் கலந்து குடித்து வந்தால் பெறும் நன்மைகள்!

பொதுவாக உடலில் ஏதேனும் பிரச்சனை என்றால் மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம். ஆனால் நமக்கு ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு இயற்கை பானங்கள் உதவி புரியும் என்பது தெரியுமா? அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தது.

நம் முன்னோர்கள் கூட தங்களது உடல்நல பிரச்சனைகளுக்கு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான் தீர்வு கண்டார்கள். அதில் அதிகம் பயன்படுத்திய பொருட்கள் தான் இஞ்சி மற்றும் மஞ்சள். இந்த இரண்டையும் கொண்டு ஓர் பானம் தயாரித்துக் குடித்தால், நம் உடலில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

இங்கு அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்றும், அந்த பானத்தைக் குடித்தால் பெறும் நன்மைகள் குறித்தும் காணலாம்.

தேவையான பொருட்கள்:

இஞ்சி - சிறிது

மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்

தண்ணீர் - 1 கப்

தேன் - சிறிது



தயாரிக்கும் முறை:

மிக்ஸியில் இஞ்சி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி சிறிது தேன் கலக்கவும். இந்த பானத்தை அவ்வப்போது காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

நன்மை #1: உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் à®µà¯ˆà®•்க  à®‰à®¤à®µà¯à®®à¯



இந்த பானம் உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் மற்றும் இரத்தத்தில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

நன்மை #2: தலைவலியை தடுக்கும்



மஞ்சள் கலந்த இஞ்சி ஜூஸில் அழற்சி எதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளது. இதனைக் குடித்தால், அடிக்கடி வரும் தலைவலியைத் தடுப்பதோடு, ஒற்றைத் தலைவலியில் இருந்தும் விடுவிக்கும்.

நன்மை #3: குமட்டல் உணர்வைக் குறைக்கும்



இஞ்சி மற்றும் மஞ்சள் ஜூஸ், வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவைக் குறைத்து, குமட்டல் உணர்வைக் குறைக்கும். மேலும் கர்ப்பிணிகள் இதைக் குடித்தால், காலையில் ஏற்படும் சோர்வு தடுக்கப்படும். இருந்தாலும் இதை கர்ப்பிணிகள் பருகும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.

நன்மை #4: உட்காயங்கள் மற்றும் உடல் வலியை à®¤à®Ÿà¯à®•்கும்



உடலினுள் உள்ள உட்காயங்கள் மற்றும் உடல் வலியை, இந்த பானம் குடிப்பதன் மூலம் தடுக்கலாம். குறிப்பாக உடற்பயிற்சிக்கு பின் இந்த பானத்தைக் குடிப்பது நல்லது.

நன்மை #5: சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்



இந்த இயற்கை பானம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகப் பராமரித்து, சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.

நன்மை #6: à®šà¯†à®°à®¿à®®à®¾à®© பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்



இஞ்சி மஞ்சள் பானம், வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை நடுநிலையாக்கி, நாள்பட்ட செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.

நன்மை #7: மாதவிடாய் தசைப்பிடிப்பு மற்றும் à®µà®²à®¿à®¯à¯ˆ à®•ுறைக்கும்



மஞ்சள் கலந்த இஞ்சி சாற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகள் மற்றும் வலியைக் குறைக்கும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...