கொத்துமல்லியை தினமும் சமையலில் சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள் என்ன?

நாம் தினமும் பயன்படுத்தும் மஞ்சள், கடுகு, கீரை, காய்கறிகள் என அனைத்துமே மருத்துவ குணங்கலை கொண்டவை. அந்த காலத்தில் உபயோகித்த அத்தனை உணவுகளும் ஆரோக்கியத்தை அதிகரித்து நோய்களை விரட்டியவை.

நாகரீகம் உணவுகளில் புகுந்த பின்னரே நோய்களும் பின்னாடியே வந்தது. அதுவும் தீராத நோய்களான சர்க்கரை வியாதி, இதய நோய்கள், புற்று நோய் ஆதியவ்ற்றிற்கு மிக முக்கிய காரணம் நாம் சாப்பிடும் பீஸா, ஃபிங்கர் சிப்ஸ் போன்ற ரசாயனம் புகுத்தப்பட்ட உணவுகளே.

அந்த காலத்தில் மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை தினமும் மசாலாவாக அரைத்து குழம்பு செய்து உண்ணும் வழக்கம் . இதனால் உடல் பலம் பெற்று ஆரோக்கியாம வாழ்ந்தனர்.

கொத்துமல்லி என்ற தனியா உடல் குளிர்ச்சியை தரும் பல நோய்களை போக்கும். அதனைப் பற்றி பல நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

ஜீரண மண்டலத்திற்கு:







ஜீரண சக்தியை தூண்டி, உண்ட உணவை நன்றாக ஜீரணிக்க செய்யும். புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் ஆகியவற்றை நிறுத்தும். அதிகமாக சுரக்கும் அமிலத்தன்மையை கட்டுப்படுத்தும்.

மலச்சிக்கலுக்கு:







வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும். மலச்சிக்கல் நீங்கும். குடல்களில் தங்கும் நச்சு மற்றும் கழிவுகளை வெளியேற்றும். மூலநோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.

கண்பார்வை:



கண்பார்வையை அதிகப்படுத்தும், கண் நரம்புகளை பலப்படுத்தும். கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கும். கண் சூட்டை குறையும்.

நுரையீரல் பாதிப்புகளுக்கு:



நுரையீரல் சம்பந்தப்பட்ட கோளாறுகளை குணப்படுத்தும். மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும். வாய் நாற்றத்தைப் போக்குகிறது. பல்வலி, ஈறுவீக்கம் குறையச் செய்யும்.

நல்ல தூக்கம்:







நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். மன அமைதியைக் கொடுக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்கும்.உடலில் அதிகரிக்கும் சோடியம் அளவை குறைக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு:







சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும். இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சூடு தணிய:



கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பித்தச்சூடும் தணியும்.

வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த:



5 கிராம் தனியாவை இடித்து அரைலிட்டர் நீரில் விட்டு 100 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட அஜீரண வயிற்றுப்போக்கு நீங்கும். அதோடு இதயம் பலப்படும்.

தலைசுற்றல்:



கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கஷாயம் செய்து அருந்தினால் சூட்டினால் வரும் தலைசுற்றல் நீங்கும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...