சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா உறுதி..! ஒமைக்ரான் பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சென்னைக்கு அனுப்பிவைப்பு..!!

மத்திய அரசு பட்டியலிட்டுள்ள நாடுகளில் சிங்கப்பூர் வருவதால், அவரை வீட்டில் தனிமைப்படுத்தி சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வந்த நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை: சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஒமைக்ரான் தொற்று பரிசோதனைக்காக அவரது சளி மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை, போத்தனூா் பகுதியைச் சேர்ந்த 42 வயது ஆண் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலமாக கடந்த 2ம் தேதி கோவை வந்தார்.

கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பில்லை என்று முடிவு கிடைத்துள்ளது.

இருப்பினும் மத்திய அரசு பட்டியலிட்டுள்ள நாடுகளில் சிங்கப்பூர் வருவதால் அவரை வீட்டில் தனிமைப்படுத்தி சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், ஒருவாரம் கழித்து மீண்டும் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஒமைக்ரான் தொற்று உள்ளதா என கண்டறிவதற்காக அவரின் சளி மாதிரிகள் சென்னையில் உள்ள மாநில சுகாதாரத் துறை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...