பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் 3-மாணவர்களுக்கு கொரோனா தொற்று..!

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் 3-மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டநிலையில், பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் 3-மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டநிலையில், பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஊரடங்கு தளர்வு காரணமாக, பள்ளிகள் தொடங்கிச் செயல்பட்டு வந்த நிலையில், புரவிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்குக் கடந்த 2ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பரிசோதனை முடிவுகள் இன்று வந்த நிலையில், பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் இரண்டு மாணவிகள் ஒரு மாணவர் என, மூன்று பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் இரண்டாம் கட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



மேலும் மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சுகாதாரத்துறை சார்பில், பள்ளி வளாகம் வகுப்பறை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...