குன்னூர் மகளிர் விடுதியில் 21-மாணவியருக்கு கொரோனா தொற்று உறுதி..!

குன்னூரில், மகளிர் விடுதியில் தங்கி இருந்த 21-பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு உள்ள 113-மாணவியருக்குப் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


நீலகிரி: குன்னூரில், மகளிர் விடுதியில் தங்கி இருந்த 21-பள்ளி மாணவிகளுக்கு கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு உள்ள 113-மாணவியருக்குப் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கோவிட் பாதிப்பு குறைந்தது. இன்று(நவ.,30), அம்பேத்கர் நகர் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள மாணவியருக்கு, ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை எடுத்ததில், 21 பள்ளி மாணவிகளுக்கும், ஒரு பணியாளருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து இங்கு பணியாற்றும் நபர்களுக்கு மாதிரி சேகரிக்கப்பட்டது. மேலும் விசாரணை நடத்தி, இவர்களின் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த விபரம் சேகரித்து, மாதிரி எடுக்கச் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இங்கு உள்ள 113-மாணவியருக்குப் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...