அக்டோபர் 12 இன்று உலக மூட்டு நோய் தினம்


உலகம் முழுவதும் மூட்டு நோய் தினம் (ஆர்த்தரைட்டீஸ்) ஆண்டுதோறும் அக்டோபர் 12-ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் லட்சக்கணக்கானோருக்கு மூட்டு நோய் பாதிப்பு இருப்பதாக புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நோயிற்கான தீர்விற்கு பதில் அளிக்கிறார் பொது மற்றும் எலும்பியல் பிசியோதெரபி மருத்துவரும் கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர் ராஜேஷ் கண்ணா.

மூட்டு வலி மற்றும் வாதத்திற்கு நிரந்தர தீர்வு

ப்ரண்ட்ஸ் பிசியோதெரபி மருத்துவமனையின் பொது மற்றும் எலும்பியல் பிசியோதெரபி மருத்துவரும் கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவ சங்க செயலாளருமான டாக்டர். ராஜேஷ் கண்ணா அவர்கள் கூறியதாவது:

இன்றைய இயந்திர வாழ்க்கையில் பழுது நீக்கபடாத இயந்திரமாக நமது உடல் பயணித்து கொண்டிருக்கிறது. இதனால் உடலும் இயந்திரங்களை போலவே அதன் அதிகபடியான செயல்பாட்டால்  à®šà®¿à®² ஆண்டுகளில் அதன் இயல்புதன்மையை இழந்து விடுகிறது. ஒரு கட்டத்தில் அதனால் இயங்க முடியாமலே போகிறது. ஒரு இயந்திரத்திற்கு எப்படி அளவான பயன்பாடும் ஒழுங்கான பராமரிப்பும் மிக முக்கியமோ அதேபோலதான் மனித உடலின் மூட்டும் சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் மூட்டு வலி மற்றும் வாதத்தை உண்டாகும். இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவருக்காவது மூட்டு வலி உள்ளதை காண முடிகிறது. இந்த உலக மூட்டு நோய் தினத்தில் மூட்டு நோய் குறித்த காரணிகள், சிகிச்சை முறைகள் மற்றும் வராமல் தடுக்கும் வழிமுறைகள் பற்றிய விளக்குகிறது இந்த மருத்துவக் கட்டுரை.

உடலிலுள்ள ஒவ்வொரு மூட்டும் உடல் அசைவிற்கு இன்றியமையாத ஒன்றாகும். மூட்டு என்பது இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எலும்புகளின் முனைகள் இணையும் பகுதியாகும். இது ஜவ்வால் இணைக்கப்பட்டு தசைகளால் வலுவூட்டப்பட்டிருக்கும். இவை ஒன்றோடொன்று உரசாமல் இருக்க மூட்டு திரவம் உள்ளது. இது எலும்புகள் தேயாமல் இருக்க உதவுகின்றன. ஆனால் இந்த திரவமானது 60 வயதிற்குமேல் குறைய ஆரம்பிக்கிறது. குறிப்பாக முழங்கால் மூட்டு, எலும்புகளில் உராய்வு ஏற்ப்பட்டு எலும்புகள் தேய ஆரம்பிகிறது. இதனால் மூட்டு வலி ஏற்ப்பட்டு நோயாளிகளால் மாடிப்படி ஏறமுடியாமை, இந்தியன் டாய்லெட்டில் உட்கார முடியாமை, தரையில் உட்கார்ந்து சாப்பிட முடியாமை, அதிக தூரம் நடக்க முடியாமை போன்ற பல்வேறு அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த நோயின் தாக்கமானது இந்த கால கட்டத்தில் 35 வயதானவர்களுக்கே அதிகமாக காணப்படுகிறது. காரணம் உடல் பருமன், உணவு பழக்கவழக்கங்கள், குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் ஹார்மோன்களில் உண்டாகும் மாற்றம், இதனால் மூட்டை சுற்றி உள்ள தசைகள் பலவீனமடைந்து பின்னர் சவ்வு சேதமடைகிறது.

இவற்றால் தசைகள் மற்றும் சவ்வுகளால் கடத்தப்படும் உடலின் எடை முழுவதும் முழங்கால் எலும்புகள் மூலமாகவே கடத்தப்படுவதால் மூட்டு திரவத்தின் அளவு குறைந்து உராய்வு ஏற்படுகிறது. இதனால் மூட்டு தேய்ந்து நாளடைவில் முழுவதுமாக அதன் அமைப்பை இழந்து விடுகிறது. இதன் விளைவாக நோயாளிகள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தான் தீர்வு என்ற சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆனால் இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பிசியோதெரபி சிகிச்சை எடுப்பதன் மூலம் மூட்டு தேய்மானத்தினை தவிர்க்க முடியும். பிசியோதெரபி மருத்துவம் என்பது பக்கவிளைவில்லாத தனித்துவமான  à®šà®¿à®•ிச்சை முறையாகும். இதில் உடல் அசைவுகள் மற்றும் உயர்தர மின்சார உபகரணங்களால் உடலுக்கு வெளியே செய்யப்படும் சிகிச்சை என்பதால்  à®ªà®¾à®¤à¯à®•ாப்பானது மற்றும் பக்கவிளைவில்லாதது. இதன் மூலம் உடல் எடை குறைக்கப்பட்டு முழங்கால் தசைகள் வலுவூட்டபடுகிறது. மூட்டின் வழியாக கடத்தப்படும் உடல் எடை குறைந்து மூட்டு திரவம் அதிகரிக்கப்படுவதால்  à®®à¯‚ட்டு உராய்வு குறைந்து மூட்டு தேய்மானம் முழுவதும் தடுக்கப்படுகிறது இதனால் நோயாளிகளின் வாழ்நாள் முழுவதும் வலி இல்லாமல் வாழ முடிகிறது.

70 சதவிகிதமான மூட்டு நோய்கள் அறுவை சிகிச்சை இல்லாமல், மூட்டு ஊசி மற்றும் வலி மாத்திரைகள் இல்லாமலே பிசியோதெரபி மருத்துவதால் முழுமையாக குணப்படுத்த முடியும்.

உங்களுக்கு மூட்டு நோய் இருக்கிறதா என்ற சந்தேகமா?

இதோ உங்கள் சந்தேகத்திற்கு தீர்வு காண மூட்டு நோய்யை கண்டறியும் சில சுயபரிசோதனைகள்:



1.படத்தில் குறிபிட்டதுபோல் நேராக உட்கார்ந்து குனிந்து கையின் நடுவிரலால் காலின் பெருவிரலை தொடவேண்டும். அப்போது முலங்கால் முட்டி மடங்ககூடாது. உங்களால் காலின் பெருவிரலை தொடமுடியாமல் போனால் உங்களுக்கு மூட்டு தேய வாய்ப்புள்ளது.



2.படத்தில் குறிப்பிடத்துபோல் நேராக படுத்து கொண்டு முழங்கால் முட்டியை படக்கி இரு கைகளால் கோர்த்து பிடிக்க வேண்டும். பிறகு கணுக்காலை மேல் நோக்கி தூக்க வேண்டும். அப்போது முலங்காலுன் கணுக்கால் ஒரே நேர்கோட்டில் இல்லாமல் விலகி இருந்தால் உங்களுக்கு மூட்டு தேய வாய்ப்புள்ளது.



3.படத்தில் குறிபிட்டதுபோல் நேராக படுத்து கொண்டு இரு முழங்கால் மூட்டையும் படக்கி இரு கணுக்களும் நேராக இருக்கும்படி வைக்க வேண்டும். அப்போது ஒரு முழங்கால் மூட்டிக்கு கீழ் இன்னாரு முழங்கால் மூட்டு இருந்தால் உங்களுக்கு மூட்டு தேய வாய்ப்புள்ளது.



4.படத்தில் குறிபிட்டதுபோல் நேராக நின்று இரு பாதத்தையும் சேர்ந்து வைக்க வேண்டும். அப்போது இரு முழங்கால் மூட்டுகிடையே ஒரு வாட்டர் பாட்டீல் நுழையும் அளவுக்கு இடைவெளி இருந்தாலோ அல்லது இரு பாதத்தையும் சேர்க்க முடியாமல் போனலோ உங்களுக்கு மூட்டு தேய வாய்ப்புள்ளது.



5.படத்தில் குறிப்பிடத்துபோல் இங்க் அல்லது ரங்கோலி பொடியை சாயமாக ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு அதில் இரண்டு கால்களையும் நனத்து ஒரு வெள்ளை தாளில் முழு உடல் எடையையும் கொடுத்து அச்சு எடுக்க வேண்டும். அந்த அச்சை மேலே குறிப்பிட்டுள்ள படத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். தட்டையான பாதமாகவோ அல்லது உயரமான பாதமாகவோ இருந்தால் உங்களுக்கு மூட்டு தேய வாய்ப்புள்ளது.

மேலே குறிப்பிட்ட சுயபரிசோதனைகளில் ஏதேனும் ஒன்று பாசிடிவ் ஆக இருந்தாலும் அருகிலுள்ள பொது அல்லது எலும்பியல் பிசியோதெரபி மருத்துவரை அணுகி வரும் முன் காக்கும் பிசியோதெரபி சிகிச்சையை எடுத்து கொள்ள வேண்டும்.

மூட்டு நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள்:

நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி குறிப்பாக முழங்கால் மூட்டு மீது உடல் எடை இருங்காதவாறு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

இந்தியமுறை கழிப்பறைகளை பயன்படுத்துவது, தரயில் உட்கார்ந்து உணவு அருந்துவது.

தனது உயரத்துக்கு ஏற்றவாறு சரியான உடல் எடையை சரிபார்த்து கொள்வது.

பெண்கள் ஹய் கீல்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும்.

பெண்கள் 6 மாதத்திற்கு ஒருமுறையாவது விட்டமின் டி பரிசோதனை செய்வது அவசியம்.

கால்சியம் அதிகம் உள்ள உணவு பொருட்களை உணவில் தினமும் சேர்ந்த கொள்ள வேண்டும். (ராகி, பால், முட்டையின் வெள்ளைக் கரு,கோஸ்,மீன்)

உடலில் ஏற்படும் சிறிய காயங்கள் மீது அக்கறை கொண்டு உடனடியாக பிசியோதெரபி மருத்துவரிடம் சிகிச்சை எடுக்க வேண்டும்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...