கோவையில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 29-பேருக்கு கொரோனா பாதிப்பு.!

துக்க வீட்டுக்கு சென்று வந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த 80-பேருக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலக்குறைவு பாதிப்பு ஏற்பட்டதால் அவர்களுக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில் 29-பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்திருக்கிறது.



கோவை: ஒரே கிராமத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 30 வயது பெண் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த பொகலூர் ஊராட்சியைச் சேர்ந்தது சொக்கட்டாம்பள்ளி. இங்கு சில நாட்களுக்கு முன்பு துக்கம் விசாரிக்கக் கிராம மக்கள் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சென்று வந்தனர்.

துக்க விழாவுக்குச் சென்ற வந்த சிலருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. 80 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து அங்குச் சுகாதாரத் துறையினர் சிறப்பு முகாம் நடத்தினர்.

இதில் காய்ச்சல் வந்தவர்களுக்கும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கும் என 80 பேருக்குத் தொடர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 29-பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்த தகவல் அறிந்தவுடன் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் கோவிந்தராஜ் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணப்பன், மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு அங்கு ஆய்வு செய்தனர்.

இதையடுத்து அந்த கிராமத்தில் குமரன் நகர், கணபதி புதூர், சொக்கட்டாம்பள்ளி என அந்த கிராமம் முழுக்க சீல் வைக்கப்பட்டது. பொது மக்கள் 5-நாட்களுக்கு நடமாடத் தடை விதிக்கப் பட்டது.

கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...