இரண்டு வருடங்களுக்குப் பிறகு கொரானா தொற்று இல்லாத பொள்ளாச்சி தாலுகா..!

பொள்ளாச்சி பகுதியில் 2020ம் ஆண்டில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், கொரோனா தொற்று இல்லாத பகுதியாக மாறியுள்ளது.


கோவை: இரண்டு வருடங்களுக்குப் பிறகு கொரானா தொற்று இல்லாத பகுதியாக பொள்ளாச்சி தாலுகா மாறியுள்ளது.

கொரோனா தொற்று இந்தியாவில் கண்டறியப்பட்ட பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வந்தது.

குறிப்பாக கோவை மாவட்டம் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது அது படிப்படியாக குறைந்து வருகிறது.

பொள்ளாச்சி பகுதியைப் பொருத்தவரை 2020ம் ஆண்டில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கடந்த ஒரு மாதமாக சுகாதாரத்துறையினர் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் இந்த பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வந்தது.

இதனையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் இயங்கத் துவங்கியது. இந்நிலையில் நேற்று பொள்ளாச்சி நகர் பகுதி, தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியம் என அனைத்து பகுதிகளிலும் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை இன்று பதிவாகவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி பொது மக்களிடையே சற்று ஆறுதல் அளித்துள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...