தூங்கி எழுந்த 60 நொடிகளுக்குள் நீர் குடிப்பதால் உடலில் உண்டாகும் அற்புதங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?


கண்ணு சொக்கும் வரை, சிவக்கும் வரை மொபைல் பயன்படுத்திவிட்டு தான் உறங்க செல்கிறோம். அதே போல உறங்கி எழுந்ததும் மீண்டும் அதே மொபைல் மின்னஞ்சல் பார்ப்பது, முகநூல் நோண்டுவது லைக் இடுவது என நாளை துவக்கிறோம். சிலர் மலம் கழிக்கும் நேரத்திலும் கூட மொபைல் நோண்டுவார்கள்.

ஆனால், இதுபோன்ற பழக்கத்தை தவிர்த்து, காலை தூங்கி எழுந்ததும் 60 நொடிகளுக்குள் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உண்டாக்கி கொள்ளுங்கள். இது உடலில் நிகழ்த்தும் ஆரோக்கிய அற்புதங்களை அறிந்தால், நீங்கள் இந்த பழக்கத்தை ஒருபோதும் கைவிட மாட்டீர்கள்....

ஒரு பெரிய டம்ளரில் 300 மி.லி அளவிலான நீர் நீங்கள் எழுந்தவுடன் பருகுவதால் உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம் 24% அதிகம் ஒன்றரை மணிநேரத்தில் அதிகரிக்கிறது.



உங்கள் சிறுநீர்கள் அற்புதமான அளவில் நச்சுக்களை வடிக்கட்ட ஆரம்பிக்கும். இரத்தத்தில் உள்ள நச்சுக்களை போக்கும். உடலில் தேவையின்றி தேங்கியிருக்கும் கெமிக்கல்களை நீக்க இது உதவும். ஒட்டுமொத உடல் செயல்திறனை ஊக்குவிக்கும்.



தூங்கி எழுந்த 60 நொடிகளில் நீர் குடிப்பதால் உங்கள் பசி குறையும். இதனால், உடன்ல் பருமன் அதிகரிப்பதை குறைக்க முடியும். கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்வதால் உடலில் கொழுப்பு செல்கள் தேங்குவதை குறிக்க முடியும்.



நீங்கள் சரியாக உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொண்டாலே போதும், நோய் எதிர்ப்பு சக்திக்கு எந்த பாதிப்பும் உண்டாகாது. மேலும், இது நிணநீர் மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் வலுவடைய செய்கிறது.



நமது உடலில் படர்ந்து பெரிதாய் இடம் பெற்றிருக்கும் உடல் உறுப்பு சருமம் தான். இதை ஆரோக்கியமாக வைத்துகொள்ள நீங்கள் சீரான அளவில் நீர் உட்கொள்ள வேண்டியது அவசியம். இதை சரியாக பின்பற்றுவதால் சருமத்தில் அதிக சுருக்கம், வறட்சி உண்டாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.



ஒருநாள் நீங்கள் சரியாக நீர் குடிக்காமல் இருந்தாலும், குடல் இயக்க செயற்பாட்டில் தாக்கங்கள் உண்டாகும். இதனால் மலம் கழிப்பதில் பிரச்சனைகள் உடனாகும். காலை எழுந்ததும் 60 நொடிகளுக்குள் நீர் குடிப்பதால் மலம் கழிப்பதில் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.



ஒரு மாதம் தொடர்ந்து தூங்கி எழுந்த 60 நொடிகளில் தண்ணீர் குடித்து பாருங்கள். உங்கள் உடலில் என்னென்ன அற்புதங்கள் உண்டாகின்றன என்பதை நீங்கள் உணர முடியும்!



Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...