பள்ளிக்கு சைக்கிளில் செல்ல மாணவர்களை வலியுறுத்துங்கள்; கொரோனாவிலிருந்து குழந்தைகளைக் காக்க கோவை அரசு மருத்துவமனை டீன் வழங்கியுள்ள பாதுகாப்பு நெறிமுறைகள்!

வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் அருகாமையில் இருந்தால் பேருந்தினைத்தவிர்த்து சைக்கிளில் செல்லுங்கள் என்பது போன்ற கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பெற்றொர்கள் தங்களது குழந்தைகளுக்கு வலியுறுத்த வேண்டும் என கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.



கோவை நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியது. முதல்அலை, இரண்டாம் அலை என மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதித்த கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.

தமிழகத்தைப்பொறுத்தவரை கொரோனா பாதிப்பு குறையத்தொடங்கியதால் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பினைச்சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளோடு பள்ளிகள் செயல்பட்டுவரும் நிலையில், அரசின் வழிகாட்டுதலின் படி, மாணவர்களுக்கு தினமும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இவை தவிர சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டாலும் அனைவருக்கும் கொரோனா சோதனை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், இதுவரை தமிழகம் முழுவதும் சில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனாதொற்று கண்டறியப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஏற்கனவே கொரோனா தொற்றின் 2 வது அலையில் சென்னையை விட அதிக பாதிப்பைச் சந்தித்து கோவை மாவட்டம் என்பதால், பெற்றோர்கள் மிக கவனமுடன் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டும் என்றும், இதற்காக சில பாதுகாப்பு வழிமுறையும் கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். அதில், 3 வது அலை குழந்தைகளை அதிகளவில் தாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துவரும் நிலையில், பெற்றோர்கள் மிக கவனமுடன் இருப்பதோடு குழந்தைகளுக்கு கைகளை அடிக்கடி கழுவுதல், மாஸ்க் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் சுகாதாரத்தை பின்பற்றுவது குறித்து தெரிவிக்க வேண்டும்.

இதோடு பள்ளிகளில் கூட்டமாக இருப்பதைத் தவிர்க்கவேண்டும் எனவும், பேருந்துகளில் பயணம் செய்யும் போது கூட்டமாக இருக்கும் என்பதால் வீட்டிற்கு அருகாமையில் பள்ளிகள் இருந்தால் சைக்கிளில் செல்ல வலியுறுத்தலாம் என கோவை மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். மேலும் பெற்றோர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். பள்ளிகளில் செய்முறைத் தேர்வு செய்யும் போது குறைந்த மாணவர்களே பங்கேற்க வைக்க வேண்டும் என்பதை பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என டீன் நிர்மலா கூறியுள்ளார். இதுப்போன்ற பாதுகாப்பு வழிமுறையை பின்பற்றினாலே கொரோனா தொற்றின் தாக்கத்திலிருந்து ஒரளவிற்குத் தப்பிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...