கொரோனா குறைந்தாலும், மாநகராட்சி பகுதிகளில் சளி, காய்ச்சல் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெறும் - அதிகாரிகள் தகவல்

கோவை: கோவையில் கொரோனா நோய் தொற்று பரவல் கடந்த சில நாட்களாக 500க்கும் கீழ் குறைந்திருந்தாலும், வைரஸ் பரவலை மேலும் கட்டுப்படுத்த மாநகராட்சி பகுதிகளில் உள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் நம்மிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர் பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி பகுதிகளில் 100 வார்டுகளிலும் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இது தவிர கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல் உள்ளதா? போன்ற கொரோனா தொற்றை கண்டறியும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கோவை மாநகராட்சி பகுதிகளில் வீடு, வீடாக சென்று கொரோனா அறிகுறி உள்ளதா? என ஆய்வும் செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும். இதன் மூலம் கொரோனா நோய்த் தொற்றினை எளிதில் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்,’’ என்றார்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...