‘குழந்தைகளை பாதிக்கும் கொரோனா பெருந்தொற்று அறிகுறிகள் மற்றும் அணுகுமுறை குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம்': குழந்தைகள் நல மருத்துவர்கள் தகவல்

கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் மூன்றாவது அலை, குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அந்நோய் குறித்து பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் விழிப்புணர்வு பெறுதல் அவசியம். என, குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.



கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் மூன்றாவது அலை, குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அந்நோய் குறித்து பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் விழிப்புணர்வு பெறுதல் அவசியம். என, குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்திய குழந்தைகள் மருத்துவர் சங்கம், தமிழ்நாடு பிரிவு, செயலாளர், மற்றும் குழந்தைகள் மற்றும் சிசு நல பிரிவு, துறைத்தலைவர், கே.எம்.சி.எச்., டாக்டர் க.இராசேந்திரன் கூறியதாவது, ‘‘இந்திய மக்கள் தொகையில் 20 வயதுக்கு கீழே 34.8 சதவிகிதம் பேர் உள்ளனர். அதில் உறுதி செய்யப்பட்ட கொரோனா பெருந்தொற்று நோயாளிகள் 12% பேர். கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் 3 முதல் 4 சதவிகிதம் பேர் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 10 வயதுக்கு குறைவான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் இறப்பு சதவிகிதம் 2.4 ஆகும். உலக அளவில் ஒப்பிடும்போது ஏறத்தாழ சமமாக உள்ளது. இந்த இறப்பில், 40 சதவிகித குழந்தைகள் முன்னரே உள்ள நோய்களான சர்க்கரை நோய் சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்பு குறைவான குழந்தைகளாக உள்ளனர்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 9 சதவிகிதம் பேருக்கு நோய் பாதிப்பு தன்மை அதிகமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு நோய் அறிகுறி இல்லாமலேயே அல்லது குறைவான பாதிப்பு உள்ளது.

குழந்தைகளைத் தாக்கும் கொரோனா பெருந்தொற்று இரண்டு வகைப்பட்டது ஒன்று கொரோனா வைரஸால் உடனடியாக வரக்கூடியது. இரண்டாவது கொரோனா வைரஸ் வந்து இரண்டு அல்லது ஆறு வாரம் கழித்து வரக்கூடிய பக்க விளைவுகளான MISC(Multisystem Inflammatory Syndrome in Children).

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நேரடியாக வரக்கூடிய நோயின் தன்மைகள்:

1. அறிகுறிகள் இல்லாமல் இருத்தல்:

RT PCR கொரோனா வைரஸ் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டிருக்கும் மற்றபடி அறிகுறிகள் இருக்காது.

2. குறைவான வகை:

காய்ச்சலுடன் அல்லது காய்ச்சல் இல்லாமலோ, தொண்டை வலி இருமல் மூக்கடைப்பு மற்றும் சுவாசம் சீராக இருத்தல், ஆக்சிஜன் அளவு 94 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருத்தல்.

3. மிதமான வகை:

மூச்சுத்திணறல் அல்லது ஆக்சிஜன் அளவு 90 முதல் 94 சதவிகிதம் வரை இருத்தல்.

4. அதிகமான வகை:

உடல் நீல நிறத்தில் மாறுதல், ஆக்சிஜன் அளவு 90 சதவிகிதத்துக்கும் குறைவாக இருத்தல். தவிர மூச்சுத்திணறல் அதிகமாகக் காணப்படுவது, உணர்வு குறைதல் அதிக தூக்கம். குழந்தையின் கை, கால் குளிர்ச்சியாக காணப்படுவது, சுயநினைவு இழப்பது பல உறுப்புகள் செயலிழத்தல்.

கொரோனா பெருந்தொற்று பாதித்து இரண்டிலிருந்து ஆறு வாரங்கள் கழித்து வரக்கூடிய MISC(Multisystem Inflammatory Syndrome in Children) எவ்வாறு கண்டறிவது?

19 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல். அல்லது தோல் அலர்ஜி, கண் சிவத்தல், வாய், கால், கைகளில் வீக்கம் இவற்றில் ஏதேனும் இரண்டு அறிகுறிகள் தெரிவது.

ரத்த அழுத்தம் குறைதல் அல்லது முக்கிய உறுப்புக்கு போகும் ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைவது, இருதய பாதிப்பு ஏற்படுவது, ரத்தம் உறையும் தன்மை அதிகரிப்பது, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி உள்ளிட்ட உடல் பிரச்சனைகள்.

உள் உறுப்புகளில் வீக்கத்திற்கான அறிகுறிகள். மற்ற நுண்கிருமிகள் பரிசோதனை செய்து இல்லை என்று உறுதிப்படுத்தல் வேண்டும். கொரோனா வைரஸ் பரிசோதனையில் உறுதிப்படுத்துதல்(RT PCR, Antigen test or Serology positive) அல்லது கொரோனா வைரஸ் பாதித்தவர்களுடன் இருத்தல்.

பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கடைபிடிக்க வேண்டியவை:

முகக் கவசம் அணிதல்.

அடிக்கடி கை கழுவுதல்.

சமூக இடைவெளியைப் பின்பற்றுதல்.

கொரோனா பெருந்தொற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல்.

கர்ப்பிணி பெண்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

பாலூட்டும் தாய்மார்கள் பின்பற்ற வேண்டியவை:

கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும்.

குழந்தை பெற்ற தாய்மார்கள் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் குழந்தையும் தாயும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால் மூலம் நோய்த் தொற்று கிருமி குழந்தைக்கு செல்லாது. மாறாக நோய்க்கான எதிர்ப்பு அணுக்கள் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு கிடைக்கும். நோய்த்தொற்று உள்ள பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டும்போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தவிர, அவர்களது கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு மன உளைச்சல் அல்லது அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளைத் தவிர்க்க கடைபிடிக்க வேண்டியவை:

குழந்தைகளுக்கு முடிந்தவரை டிவி, மொபைல் போன், கம்ப்யூட்டர் போன்றவற்றின் பயன்பாடு குறைப்பது நல்லது. ஊடகங்களில் பதற்றம் தரும் செய்திகள் குழந்தைகளுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, அவற்றை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளிடம் அன்பாக அமர்ந்து பேச வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் பயம் இருந்தால் அதைப் போக்க முற்படவேண்டும். குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க வீட்டுக்குள்ளேயே அவர்களை விளையாட வைக்கலாம். குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகளைக் கண்டறிந்து அவற்றை ஊக்குவிக்க வேண்டும்.

இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு பிரிவில் 3,500 குழந்தைகள் மருத்துவர்கள் உள்ளனர். நாங்கள் மூன்றாவது நோய்த்தொற்று பரவலை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்தியேக கொரோனா மையம் அமைக்கப்பட்டு மக்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், உதவிகள் மேற்கொள்ளப்படும். டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

கொரோனா பெருந்தொற்று பரவலால் அதிக மனநிலை பாதிப்பு ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரத்தியேக பயிற்சி அளிக்க உதவுகிறோம். அவசரகால உதவி எண்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேல், தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்'' என்று அவர் கூறினார்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...