கோவையில் ஜூன் முதல் வாரத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் குறைய வாய்ப்புள்ளது... சுகாதாரத்துறை தகவல்..!

கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவைப் போல கோவையில் பரவல் காணப்படுகிறது. நோய் பாதிப்பு இரட்டிப்பு பரவல் சதவிகிதம் ஆகியவை ஒரே மாதிரி உள்ளது. அதன்படி பார்த்தால் ஜூன் முதல் வாரத்தில் கோவையில் நோய்த்தொற்று பரவல் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.


கோவை: கோவையில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவைப் போல கோவையில் பரவல் காணப்படுகிறது. நோய் பாதிப்பு இரட்டிப்பு பரவல் சதவிகிதம் ஆகியவை ஒரே மாதிரி உள்ளது. அதன்படி பார்த்தால் ஜூன் முதல் வாரத்தில் கோவையில் நோய்த்தொற்று பரவல் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து ஏறுமுகத்தில் பாதிப்பு உள்ளது. தீவிர ஊரடங்கு பகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அரசு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை மையங்களில் மட்டும் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், கடந்த மார்ச் முதல் வாரத்தில் கோவை இரண்டு சதவிகிதத்திற்கு குறைவாக இருந்த கொரோனா பரவல் நேற்று முன்தினம் 45.8 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மற்ற எந்த மாவட்டங்களிலும் இல்லாத வகையில் கோவையில் பரவல் சதவிகிதம் அதிகரித்துள்ளது. தவிர, கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கோவையில் பரவல் 30 சதவிகிதத்திற்கும் மேலாக உள்ளது. இந்தநிலையில், தமிழகத்திற்கு முன் கொரோனா உச்சத்திலிருந்த கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியபோது, “கோவையில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவைப் போல கோவையில் பரவல் காணப்படுகிறது. நோய் பாதிப்பு இரட்டிப்பு பரவல் சதவிகிதம் ஆகியவை ஒரே மாதிரி உள்ளது. அதன்படி பார்த்தால் ஜூன் முதல் வாரத்தில் கோவையில் நோய்த்தொற்று பரவல் குறைய வாய்ப்புள்ளது. இந்தநிலையில், நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வீடுகள்தோறும் ஆய்வு உறுதி செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் பரிசோதனைகளை அதிகப்படுத்துதல் முன்கூட்டியே சிகிச்சைக்கு அனுமதித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனுடன் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, விரைவில் தொற்று குறையும்'' என்று கூறினார்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...