கிணத்துக்கடவில் அம்பேத்கர் நகரில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவில் அம்பேத்கர் நகரில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சுகாதாரத்துறை சார்பில் அப்பகுதி அடைக்கப்பட்டது.


கிணத்துக்கடவு: கிணத்துக்கடவில் அம்பேத்கர் நகரில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சுகாதாரத்துறை சார்பில் அப்பகுதி அடைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரில் வசித்த பெண் தூய்மைப் பணியாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

இதனையடுத்து, சுகாதாரத்துறை சார்பில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனையில் அம்பேத்கர் பகுதியில் வசிக்கும் 14 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இன்று ஆர்.எஸ்.ரோடு பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியைத் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அப்பகுதி முழுவதும் இரும்புத் தகடுகளால் அடைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எக்காரணத்தை கொண்டும் வெளியே வரவேண்டாம் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...