பொள்ளாச்சியில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 68 வயது மூதாட்டி பலி..!

பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சியில் இன்று 84 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 68 வயது மூதாட்டி கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சியில் இன்று 84 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 68 வயது மூதாட்டி கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று பொள்ளாச்சி நகராட்சியில் 26 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 30 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 28 பேருக்கும் என ஒரே நாளில் 84 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பொள்ளாச்சி கணபதி வீதியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட நிலையில், உயிர் இழந்தார்.

தொற்று ஏற்பட்ட இடங்களை சுகாதாரத் துறையினர் கண்டறிந்து, தனிமைப்படுத்தி தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஊரடங்கு சமயத்தில் பொதுமக்களை வெளியில் வராமல் இருக்கவும், விழிப்புடன் இருக்கவும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...