பொள்ளாச்சியில் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இன்று 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இன்று 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. பொள்ளாச்சி பகுதியைப் பொறுத்தவரை இன்று நகரப்பகுதியில் 15 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 49 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 28 பேர் என மொத்தம் இன்று ஒரே நாளில் 92 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும், பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...