கோவையில் சமையல் கியாஸ் சிலிண்டர் டீலர்கள் மற்றும் டெலிவரி பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்..!

கோவை: கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலைப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவையில் சமையல் கியாஸ் சிலிண்டர் டீலர்கள் மற்றும் டெலிவரி பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோவையில், சமையல் கியாஸ் சிலிண்டர் டீலர்கள் மற்றும் டெலிவரி பணியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள எச்.பி., கியாஸ் மண்டல அலுவலக வளாகத்தில் இன்று நடந்தது. இதில் 300-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு புதுச்சேரி விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரா, இந்த சிறப்பு முகாமுக்கு தலைமை வகித்தார்.

‘இண்டேன் கேஸ்' ஜெயபிரகாஷ், ‘பாரத் கேஸ்' கஸ்தூரி, ‘எச்.பி கேஸ்' சார்பில் தங்க மாயாண்டி, ‘கிளவுட் 9 கேஸ்' வசந்த், ‘கோவை கேஸ்' பிரபு, மேட்டுப்பாளையம் சண்முகவடிவு உள்ளிட்ட டீலர்கள் மற்றும் சமையல் கியாஸ் டெலிவரி பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...