கோவையில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று - மாவட்ட நிர்வாகம் தகவல்!

கோவை: கோவையில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கி 6 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவையில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கி 6 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருப்பு பூஞ்சை நோய் என்பது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஆக்சிசன் பயன்படுத்தப்பட்டு குணமடைந்தவர்களை தாக்கக் கூடிய நோயாகும். இதன் அடிப்படையில் இந்த பூஞ்சை நுரையீரல், நகம், தோல், வயிறு, கிட்னி, மூளை, வாய் மற்றும் அந்தரங்க உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால், இவர்களை பரிசோதனை செய்யும் பொழுது கொரோனா நெகட்டிவ் என்றே வரும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து அவர்களை குணப்படுத்த வேண்டும்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது, கோவையில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கி 6 பேர் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றன. யாரும் இந்த நோயைப் பற்றி கவலைப்பட அச்சப்படத் தேவையில்லை. அதற்கான போதிய வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...