சேலம் அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் 5 பேர் அனுமதி - மருத்துவர்கள் தீவிர சிகிச்சை!

சேலம்: கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் சேலம் அரசு மருத்துவமனையில் 5 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


சேலம்: கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் சேலம் அரசு மருத்துவமனையில் 5 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நோய் கருப்பு பூஞ்சை.

இந்த நோயால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தரும் செய்தியை வெளியானது. கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்களையே இந்த நோய் அதிகமாக தாக்குவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்று சேலத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சிலருக்கு கருப்பு பூஞ்சை என்ற புதிய தொற்று பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த 50 வயது கொண்ட நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன் வீடு திரும்பியுள்ளார். இந்த சூழலில் அவருக்கு கண்ணில் கருப்பு பூஞ்சை அறிகுறி இருந்ததால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபருக்கும் கண்ணில் கருப்பு பூஞ்சை தொற்று போல் தென்பட்டுள்ளது. இதனையடுத்து அவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி கூறுகையில், இந்த மருத்துவமனை இதுவரை ஐந்து கருப்பு பூஞ்சை வழக்குகளை கண்டுள்ளது மற்றும் அவர்களுக்கு சிகிச்சையளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

பெரும்பாலும் 45-60 வயதிற்குட்பட்டவர்கள், நீரிழிவு நோயாளிகள் என பாதிக்கப்பட்ட ஐந்து ஆண்களும் சிறப்பு வார்டில், ENT உள்ளிட்ட நிபுணர்களின் குழுவின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினார்.

சிவப்பு கண்கள், வீங்கிய கன்னங்கள், தலைவலி மற்றும் தொண்டை நெரிசல் ஆகியவற்றின் பின்னர் சிகிச்சையின் ஒரு பகுதியாக அவர்கள் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தி சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார்.

இருப்பினும், கோவை மாவட்டத்தில் இதுபோன்ற எந்தவொரு நோய்த்தொற்றும் இதுவரை பதிவாகவில்லை

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...