கிணத்துக்கடவில் புதிதாக இன்று 62 பேருக்கு கொரோனா உறுதி; காய்ச்சல் முகாமில் அறிகுறியுடன் இருந்த 60 பேருக்கு பரிசோதனை

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிக கடுமையாக அதிகரித்து வருகிறது. கிணத்துக்கடவு பகுதியில் மே-20ம் தேதி வரை 1,136 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்த நிலையில், மேலும் புதிதாக 62 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் கிணத்துக்கடவு பகுதியில் மொத்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,136 இருந்து 1,198 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரதுறை தகவல் தெரிவித்துள்ளனர்.

காய்ச்சல் முகாம்

சுகாதாரத்துறை சார்பாக தொற்றின் தாக்கத்தை குறைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அறிகுறிகள் உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிய, காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கிணத்துக்கடவு தாலூக்கா பகுதி மற்றும் கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களான காட்டம்பட்டி, தாசநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில், இன்று காய்ச்சல் முகாம் நடத்தபட்டது. இந்த மருத்துவ பரிசோதனையில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 60 பேருக்கு, பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக சுகாதாரதுறை தகவல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரிசோதனை செய்யபட்டவர்கள், முடிவுகள் வரும் வரை தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...