பொள்ளாச்சியில் இன்று 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; ஒருவர் பலி - சுகாதாரத்துறை தகவல்

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்று, ஒரே நாளில் பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்று பகுதியில் 87 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 30 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 39 பேருக்கும் என ஒரே நாளில் 87 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும், இன்று பொள்ளாச்சி காமாட்சி நகரைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். நோய் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளுக்கு நாள் பொள்ளாச்சி நகர் மற்றும் கிராம பகுதிகளில் நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்களை விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...