நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சிகிச்சை மையம் தொடக்கம்..!

கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.


கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கோவை மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.



அதன்படி, கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30-க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஒரு அறையில் 15 படுக்கைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அருகில் உள்ள இடத்தில் சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் ஓரிரு நாளில் அந்தப் பணிகள் முடிவடைந்து, அந்த இடத்திலும் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வட்டார மருத்துவ அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...