கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்காக 16,119 பேர் சிகிச்சை!

கோவை: கோவை மாவட்டத்தில், கொரோனா தொற்றுக்காக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 16,119 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தில், கொரோனா தொற்றுக்காக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 16,119 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 4495 பேர், பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் மட்டுமின்றி, 7800 பேர், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் சதவீதத்தில் 61 சதவீதம் பேர், மாநகர பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சூலுார், துடியலூர் வட்டாரங்களில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, அரசின் புள்ளி விவரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 10,495 படுக்கைகள், தயார் நிலையில் உள்ளன. நேற்று வரை, 3,93,329 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மொத்தம், 6320 டோஸ் தடுப்பூசி இருப்பில் உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...