பொள்ளாச்சியில் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடமாடும் கொரோனா பரிசோதனை மையம்..!

கோவை: பொள்ளாச்சியில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடமாடும் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சியில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடமாடும் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சியில் சுகாதாரத்துறை சார்பில், பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மதியம் 12 மணி வரை நகரில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட், கடை வீதி, உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்களை அமைத்துள்ளனர்.



இதேபோல, பொள்ளாச்சி நகரில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் காவல்துறை உதவியோடு வாகன ஓட்டிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மேலும், வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை சார்பில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வும் அளிக்கப்பட்டது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...